எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : 'விவசாயி' வீட்டுப் பிள்ளை அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அம்மா ஆட்சி தமிழகத்தில் அமைக்க சபதம் ஏற்போம் என்று முன்னாள் எம்.பி.யும், அண்ணா தொழிற்சங்க பேரவையின் முன்னாள் செயலாளருமான எஸ்.முத்துமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி வருமாறு:-
கோடிக்கணக்கான தமிழர் நெஞ்சங்களில் வாழும் அம்மாவின் 73-வது பிறந்த நாள் விழா ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக நாடெங்கிலும் இன்று கொண்டாடப்படுகிறது.
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர் அம்மா. 1991, 2001 மற்றும் 2011, 2016 ஆகிய சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் கழகத்தை அமோகமாக வெற்றிபெறச் செய்து பல்வேறு சோதனைகளை முறியடித்து 6 முறை முதலமைச்சர் பொறுப்பேற்று நல்லாட்சி தந்தார்.
தன் இறுதி மூச்சுவரை புரட்சித்தலைவர் வழியில் அண்ணாவின் கொள்கையை பின்பற்றினார்.கடந்த 16-11-1992-ல் உச்சநீதிமன்றம் (9 நீதிபதிகள் அமர்வு) 'இந்திரவகானி' வழக்கில் இட ஒதுக்கீடு எந்த வகையிலும் 50 விழுக்காடுகளை தாண்டக் கூடாது என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு தமிழ்நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
பெரும் பாதிப்பை நிவர்த்தி செய்திட 69 சதவீத இட ஒதுக்கீடு தொடரும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு புதிய சட்டம் கொண்டு வந்து, அரசியலமைப்புச் சட்டம் அட்டவணை 9-ன் சட்டப் பாதுகாப்பைப் பெற்றுத் தந்தவர் 'சமூகநீதி காத்த வீராங்கனை' அம்மா .
அண்ணா, புரட்சித்தலைவர் வழியில் ஈழத் தமிழர் தம் உரிமைகள் காக்க போர்க்குரல் எழுப்பியும், தீர்மானங்கள் நிறைவேற்றியும், உலகத் தமிழர்களின் பாதுகாப்பு அரணாக விளங்கியவர் அம்மா. காவிரி நீர் பிரச்சினையில் இறுதி தீர்ப்பை 19-12-2013-ல் மத்திய அரசு கெஜட்டில் பதிவு செய்து காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் மற்றும் நதிநீர் பங்கீடு குழு அமைக்க வழி வகுத்தார். பெரியாறு அணை நீர்மட்ட பிரச்சனையில் நமது உரிமையை நிலைநாட்டினார்.தமிழ்நாடு மீனவர்களின் அவலம் தீர மத்திய அரசை எதிர்த்து துணிவுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அது நடைபெற்று வருகிறது.
காலத்தை வென்ற திட்டங்கள்
புரட்சித் தலைவரின் சத்துணவு திட்டம் அம்மா கொண்டுவந்த அரசு தொட்டில் குழந்தை திட்டம் ஆகியவை காலத்தை வென்ற திட்டங்களாகும். அம்மா உணவகம் ஏற்படுத்தி ஏழை,எளிய உழைக்கும் மக்களின் பசியைப் போக்கினார். அம்மா 'இலவசம்' என்ற வார்த்தைக்கு பதிலாக 'விலையில்லா' என்ற வார்த்தையை கண்டுபிடித்த சமூக 'அரசியல் விஞ்ஞானி' அம்மா. குடும்ப அட்டைக்கு விலையில்லா 20 கிலோ அரிசி, மிக்சி கிரைண்டர், ஃபேன், தாலிக்கு தங்கம், பெண்களுக்கு தொழில் தொடங்க தனி நபர் கடன், 30 சதவீத ஒதுக்கீடு, உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு, மகளிர் சுய உதவி குழுக்கள் மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் நீதிமன்றங்கள், குழந்தை பாதுகாப்புக்கு 15 அம்ச திட்டம், வேலைக்குச் செல்லும் மகளிருக்கு 40 சதவீத மானியத்துடன் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், பிறக்கும் குழந்தைக்கு பரிசுப்பெட்டகம், பேருந்து நிலையங்களில் குழந்தைகளுக்கு பாலூட்ட தனி அறைகள், மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள் சீருடை உள்ளிட்ட படிப்புக்கு தேவையான அனைத்து பொருட்கள் வழங்கும் திட்டம், கிராமப்புற ஏழைகளுக்கு ஆடு மாடு வழங்கும் திட்டம், அனைத்து சிகிச்சை பெறும் வகையில் மருத்துவ காப்பீடு திட்டம், அனைத்து குடும்பங்களுக்கும் விலையில்லா 100 யூனிட் மின்சாரம், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட் போன்றவை மக்களின் பெரும் பாராட்டைப் பெற்றன.
சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்துடன் சொட்டு நீர் பாசன திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம், அன்னதான திட்டம், சில்லறை வணிகத்தில் தமிழ்நாட்டில் அந்நிய முதலீடு செய்ய விடாமல் தடுத்தது, நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.100 கோடி ஒதுக்கியது, இஸ்லாமியருக்கு 'உலமா பென்சன்' உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள், நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள், உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி 9,10-10-2015-ல் ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடிக்கு தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தியது, தமிழ்த்தாய் விருது, கபிலர், உ.வே. சாமிநாத அய்யர், கம்பர் மற்றும் தமிழ்ச் செம்மல் விருது உள்ளிட்ட 18 விருதுகள் வழங்கி ஆணை பிறப்பித்தார். டெல்லியில் ரூபாய் 50 லட்சம் செலவில் தமிழ் இருக்கை மற்றும் அமெரிக்காவில் 'ஹார்வார்ட்' பல்கலைக்கழகத்தில் ரூ.10 கோடி செலவில் தமிழ் இருக்கை உருவாக்கியது எல்லாம் அம்மாவின் பெரும் சாதனைகள்.
அரசுத் தொட்டில் குழந்தைகள் திட்டம் - அன்னை தெரசாவின் பாராட்டைப் பெற்றது. மழை நீர் சேகரிப்புத் திட்டம் - டாக்டர் அப்துல் கலாமின் பாராட்டை பெற்றது. சுனாமி நடவடிக்கைகள் - அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டனின் பாராட்டையும், உலக நாடுகளின் பாராட்டையும் பெற்றது. இந்திய அரசியல் அரங்கில் முக்கிய முடிவுகள் எடுக்க பல பிரதமர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் போன்றோர் நேரில் வருகை தந்து அவரை சந்தித்தது தமிழ்நாட்டுக்குக் கிடைத்தது மிகப்பெரிய பெருமையாகும்.
தந்தை பெரியாரின் சமூகநீதி கொள்கைகளை காக்க தமிழர் இனமானம் காக்கும் வகையில் அண்ணாவின் அரசியல் கொள்கைகள் காக்க புரட்சித்தலைவரின் மனிதநேய திட்டங்கள் தொடர தமிழ்நாட்டின் உரிமைகள் காத்திட 'விவசாய வீட்டு பிள்ளை' அண்ணன் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மீண்டும் அமைத்திட இந்நாளில் நாம் அனைவரும் வீர சபதம் ஏற்போம். திராவிட வெற்றி வரலாறு படைப்போம்.
எஸ்.முத்துமணி
முன்னாள் எம்.பி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 23 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-07-2025.
17 Jul 2025 -
தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன்
17 Jul 2025சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பதிவை தொடங்கி வைத்தார்
17 Jul 2025சென்னை, 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.&nbs
-
தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம்
17 Jul 2025புதுடெல்லி, தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
த.வெ.க. கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
17 Jul 2025சென்னை, த.வெ.க. கட்சிக் கொடி தொடர்பாக த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு: கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்
17 Jul 2025பெங்களூரு, பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு என்று கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
-
தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு அளவே இல்லையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
17 Jul 2025சென்னை, தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? என திருச்சி சிவாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசம்: நிதிஷ் அறிவிப்பு
17 Jul 2025பாட்னா, பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
-
2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று தனி விண்வெளி நிலையம்: அமைச்சர் ஜிதேந்திர சிங்
17 Jul 2025புதுடெல்லி, வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவி
-
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
17 Jul 2025திருவனந்தபுரம், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
-
உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி
17 Jul 2025சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது.
-
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
17 Jul 2025சென்னை, ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
இந்தியா தாக்கப்பட்டால்... உலகிற்கு வலிமையான செய்தியை கொடுத்திருக்கிறோம்: அமித்ஷா பேச்சு
17 Jul 2025ஜெய்ப்பூர், இந்தியா தாக்கப்பட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படும் என உலகிற்கு ஒரு வலிமையான செய்தியை நாம் கொடுத்திருக்கிறோம் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
மதுவிலக்கு டி.எஸ்.பி. கார் முன்னறிவிப்பின்றி திரும்ப பெறப்பட்டதா? காவல் துறை விளக்கம்
17 Jul 2025சென்னை, மயிலாடுதுறையில் மதுவிலக்கு டி.எஸ்.பி. வாகனம் இன்றி நடந்து சென்றதாக வெளியான செய்திக்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி
17 Jul 2025கார்கில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
-
மதுராந்தகத்தில் 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ். அறிவிப்பு
17 Jul 2025சென்னை, நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மதுராந்தகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி
-
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம்
17 Jul 2025புதுடெல்லி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
-
ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்: ராமதாஸ் உறுதி
17 Jul 2025விழுப்புரம், ''ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் மேலும் 488 இடங்கள் அதிகரிப்பு
17 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
வரிவிதிப்பு முறைகேடு விவகாரம்: ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்புக்குழு: ஐகோர்ட்டு கிளை
17 Jul 2025மதுரை, மதுரை மாநகராட்சி விரி விதிப்பில் முறைகேடு தொடர்பான வழக்கை ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையிலான சிறப்பு குழு விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் கனமழைக்கு 124 பேர் பலி
17 Jul 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் கனமழைக்கு இதுவரை 124 பேர் உயிரிழந்தனர்.
-
ஈராக்; வணிக வளாகத்தில் தீவிபத்து: 60 பேர் உயிரிழப்பு - பலர் படு காயம்
17 Jul 2025பாக்தாத், ஈராக்கில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 60 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர்.
-
அமெரிக்காவின் அலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!
17 Jul 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
-
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப்
17 Jul 2025வாஷிங்டன், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
ராகுலின் ரேபரேலி பயணம் ரத்து
17 Jul 2025ரேபரேலி, ரேபரேலி பயணத்தை ராகுல்காந்தி ரத்து செய்தார்.