முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைவருக்கும் இது சிக்கலான நேரம், பாதுகாப்பாக இருங்கள் - பிரியங்கா காந்தி

வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், என் அன்பு நாட்டு மக்களே, நம் அனைவருக்கும் இது மிகவும் சிக்கலான காலம். நம்முடைய குடும்பத்தினர், நண்பர்கள், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் பலரும்  கரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர்.எனவே, கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

எச்சரிக்கையுடனும், இரக்கத்துடனும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த கொரோனா போரில் வெற்றி பெறுவோம் என்று பதிவிட்டுள்ளார். நாட்டில் தற்போது ஒரேநாளில் புதிதாக 2,17,353 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஒரேநாளில் 1,185 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் 15,69,743 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து