எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஹவானா : அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு சிம்ம சொப்னமாகத் திகழந்து வரும் குட்டி நாடான கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.
ஏறக்குறைய 60 ஆண்டுகளாக கேஸ்ட்ரோ குடும்பத்தினர் கியூபன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களாக இருந்த நிலையில் அந்த மாபெரும் சகாப்தம் முடிவுக்கு வருகிறது. அடுத்தும் நாட்டை ஆளவரும் இளம் தலைமுறையினருக்கு பொறுப்புகளை வழங்குவதாகக் கூறி ராவுல் காஸ்ட்ரோ பதவி விலக உள்ளார்.
1959-ம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ தலைமையில் ஏற்பட்ட புரட்சியை தொடர்ந்து சர்வாதிகாரி பாடிஸ்டுடாவின் ஆட்சி அகற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து பிடல் காஸ்ட்ரோ கியூப அதிபரானார். அன்று முதல் கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து கியூபாவின் அசைக்க முடியாத தலைவராக விளங்கி வந்தார் பிடல்.
அமெரிக்காவின் பல்வேறு தடைகள், கொலை முயற்சிகள் (கிட்டத்தட்ட 600 முறை ), பொருளாதாரத் தடை ஆகியவற்றைத் தாண்டி இரும்பு மனிதராக கியூபாவை பிடல் வழி நடத்தி வந்தார். கடந்த 2006-ம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இடைக்கால அதிபராக பதவியேற்றுக் கொண்ட ராவுல் கேஸ்ட்ரோ 2008-ல் முறைப்படி அதிபராக தேர்வு செய்யப்பட்டார். 2011-ம் ஆண்டு கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
அவரது ஐந்தாண்டு பதவிக் காலம் முடிந்து, 2-வது முறை அதிபராக ரவுல் கேஸ்ட்ரோ நேற்று முன்தினம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். கியூபாவின் அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒரு அதிபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்பதால், அதிபர் பொறுப்பிலிருந்து விலகிய ராவுல் காஸ்ட்ரோ கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.
ராவுல் காஸ்ட்ரே அதிபராக இருந்த காலத்தில் பரமவைரியான அமெரிக்காவுடன் நட்பு பாராட்டினார். 2014-ம் ஆண்டில் அதிபராக இருந்த பாரக் ஒபாமாவுடன் ராவுல் காஸ்ட்ரோ சந்தித்து பேசினார். காலங்காலமாக எதிரியாக இருந்த அமெரிக்காவுடன் கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோ நட்பாக சென்றது உலக நாடுகளிடையே வரவேற்பை பெற்றது. கியூபா மீது விதிக்கப்பட்ட பல்வேறு தடைகளும் அப்போதைய அதிபர் ஒபாமாவால் விலக்கப்பட்டன. ஆனால், அதைத் தொடர்ந்து வந்த அதிபர் டிரம்ப் மீண்டும் பல பொருளாதாரத் தடைகளை கியூபா மீது விதித்தார். ஏறக்குறைய 60 ஆண்டு காலம், உலகில் கியூபாவின் முகமாக, கம்யூனிஸத்தின் முகமாக காஸ்ட்ரோ சகோதரர்கள் இருந்து வருகிறார்கள். ஆனால், இந்த சகாப்தம் விரைவில் முடிகிறது.
இந்நிலையில் கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்தக் கூட்டத்தில்தான் கம்யூனிஸ்ட்கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ராவுல் காஸ்ட்ரோ அறிவித்தார். இந்தக் கூட்டத்தில் ராவுல் காஸ்ட்ரோ பேசுகையில், நான் எனக்கு வழங்கப்பட்ட இலக்கை, பணியை முடித்து விட்டதாக மனநிறைவு கொள்கிறேன். இனி என்னுடைய மண்ணை எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்கும் நம்பிக்கை வந்துள்ளது என அறிவித்தார்.
ஆனால், தனக்குப்பின் யாரை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக நியமிக்கப்போகிறார் என்பது குறித்து ராவுல் காஸ்ட்ரோ அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், ராவுல் காஸ்ட்ரோவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் 60 வயதான மிகுல் டியாஸ் கேனல் அந்த பதவியை ஏற்பார் எனத் தெரிகிறது. ராவுல் காஸ்ட்ரோவின் இந்த அறிவிப்பால் கியூபாவில் 60 ஆண்டு காலம் ஆட்சியில் இந்த காஸ்ட்ரோ குடும்பத்தினரின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது.
ஆனால், கியூவில் இப்போது மிகமோசமான பொருளாதார சூழல் நிலவும்போது, ஆட்சி மாற்றம், தலைமை மாற்றம் மிகவும் கடினமானதாக இருக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
கரோனா வைரஸ் தொற்று, அதிக வேதனைகள் நிறைந்த நிதிச்சீர்த்திருத்தங்கள், ட்ரம்ப் நிர்வாகம் பிறப்பித்த கடும் பொருளாதாரத் தடைகள் போன்றவற்றால் பொருளாதாரம் கடந்த ஆண்டு 11 சதவீதம் சரிந்தது. சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. உணவுக்காக மக்கள் நீண்ட வரிைசயில் நிற்பதையும், சமூகத்தில் அதிகரித்துள்ள ஏற்ற தாழ்வுகளையும் பல நகரங்களில் காண முடிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : சென்னையில் விசாரணையை நடத்த சி.பி.ஐ.க்கு விஜய் கடிதம்
16 Mar 2026சென்னை, கரூா் கூட்ட நெரிசல் வழக்கில் சென்னை அல்லது தமிழ்நாட்டில் ஏதேனும் ஓரிடத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சி.பி.ஐ.
-
தேர்தல் நடத்தை விதி அமல் எதிரொலி: மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் மனுக்கள் பெட்டி
16 Mar 2026கோவை, தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
-
காவல்துறையினரை தாக்கி தப்பிக்க முயற்சி: சென்னை மாதவரத்தில் ரவுடி என்கவுண்டர் சுட்டுக்கொலை
16 Mar 2026சென்னை, சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
-
த.வெ.க. - என்.டி.ஏ. கூட்டணி குறித்து இதுவரை பேச்சு நடத்தப்படவில்லை: செங்கோட்டையன் பேட்டி
16 Mar 2026கோவை, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் என்.டி.ஏ. கூட்டணி குறித்து இதுவரை எந்த விதமான கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை என்று த.வெ.க.
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சா? வதந்திகளை நம்ப வேண்டாம் என த.வெ.க. திட்டவட்டமாக மறுப்பு
16 Mar 2026சென்னை, தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தகவல் வெளியானதற்கு அக்கட்சியின்
-
நேபாளத்தில் சாலை விபத்தில் பலியான 7 பேர் உடல்களை கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை
16 Mar 2026சென்னை, நேபாளத்துக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டபோது சாலை விபத்தில் சிக்கி 7 தமிழா்கள் உயிரிழந்தனா்.
-
அடுத்த ஒரு மாதத்திற்கு தி.முக.வினர் ஓய்வின்றி தோ்தல் பணியாற்றுங்கள்: கட்சியினருக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுரை
16 Mar 2026சென்னை, அடுத்த ஒரு மாதம் தி.மு.க.வினா் ஓய்வின்றி தோ்தல் பணியாற்ற வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
-
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்: விளம்பரங்கள், போஸ்டர்களை அகற்றும் அடிக்கும் பணி தீவிரம்
16 Mar 2026சென்னை, சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், தமிழகம் முழுவதும் விளம்பரங்கள் மீது பெயிண்ட் அடித்து மறைக்கும் பணிகளும் போஸ்டர்கள் அகற்றும் பணிகளும
-
தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் 5 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
16 Mar 2026மதுரை, தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் வகையில் சந்தேகத்துக்கு இடமான 5 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதன
-
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு
16 Mar 2026சென்னை, 2025-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பூரில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத 41 லட்சம் ரூபாய் பறிமுதல்: தேர்தல் பறக்கும் பட்டையினர் நடவடிக்கை
16 Mar 2026திருப்பூர், திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ. 41 லட்சம் தேர்தல் பறக்கும் பட்டையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
-
மேற்குவங்க மாநிலத்திற்கு புதிய தலைமைச்செயலாளர் நியமனம்: தேர்தல் ஆணையம் உத்தரவு
16 Mar 2026கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக துஷ்யந்த் நாரியாலாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு
16 Mar 2026சென்னை, மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
-
வாக்குகளை எண்ண கூடுதல் இடைவெளி: தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
16 Mar 2026புதுடெல்லி, வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் இடைவெளி உள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்ததை அடுத்து இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
பா.ஜ.க.வுடன் செல்பவர்கள் யாராக இருந்தாலும் தோல்வி நிச்சயம்: டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து
16 Mar 2026சென்னை, பா.ஜ.க.வுடன் யார் சென்றாலும் அவர்களுக்கு தோல்விதான். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் 2001-இல் தி.மு.க. தோற்றது.
-
மத்திய கிழக்கில் மோதலால் 4,335 இந்திய விமானங்கள் ரத்து: மத்திய அரசு தகவல்
16 Mar 2026புதுடெல்லி, மேற்காசிய மோதலால் காரணமாக இந்திய விமானங்கள் ரத்து குறித்து மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளால் பாராளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 19, 20-ம் தேதிகளில் விடுமுறை
16 Mar 2026டெல்லி, நவராத்திரி, ரம்ஜான், குடீ பாடவா ஆகிய பண்டிகைகள் வருவதால் பாராளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 19,20ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



