முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்டத்தை வெற்றியில் முடிக்கும் வீரராக நான் மேம்பட்டுள்ளேன் : பஞ்சாப் வீரர் ஷாரூக் கான் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 18 ஏப்ரல் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : கடந்த சில ஆண்டுகளில் ஆட்டத்தை வெற்றியில் முடிக்கும் வீரராக நான் மேம்பட்டுள்ளேன் என்றும் கடினமான தருணங்களிலும் சிறப்பாக ஆடும் திறமை என்னிடம் இருக்கிறது என்றும் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷாரூக் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் ஆட்டத்தில், சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, ஒரு கட்டத்தில் 6.2 ஓவர்களில் 26 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பிறகு ஷாரூக் கான் அதிரடியாக ஆடி 36 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் சேர்க்க, அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்தது. எனினும் தோல்வி தவிர்க்க முடியாததானது.

ஆட்டம் முடிந்த பிறகு ஷாரூக் கான் கூறியதாவது.,

ஐ.பி.எல் போட்டியைப் பொருத்தவரையில் பின்வரிசையில் களமிறங்கி அதிரடியாக ரன் சேர்த்து ஆட்டத்தை வெற்றியில் முடிக்க வேண்டும் என்பதுதான் எனக்கு வழங்கப்பட்ட பணி. அதற்காக எல்லா நேரத்திலும் அதிரடியாக ஆடி ரன் சேர்க்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. சில நேரங்களில் முன்வரிசை பேட்ஸ்மேன்கள் விரைவாக ஆட்டமிழக்கும்போது, சூழலுக்கு தகுந்தவாறு பொறுப்பை உணர்ந்து விளையாடி, அணியை சரிவிலிருந்து மீட்க வேண்டியதிருக்கும்.

நான் சிறந்த பேட்ஸ்மேன். தமிழக அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக முன்வரிசையில் களமிறங்கி பேட் செய்துள்ளேன். கடினமான தருணங்களிலும் சிறப்பாக ஆடும் திறமை என்னிடம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் ஆட்டத்தை வெற்றியில் முடிக்கும் வீரராக நான் மேம்பட்டுள்ளேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து