எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம்,ஏப்.- 6 - சினிமா காமெடியன் வடிவேலு, நடிகை குஷ்புவின் தேர்தல் பிரச்சாரத்தை நம்பி தேர்தல் களம் காணும் முதல்வர் கருணாநிதியின் பரிதாப நிலையை கண்டு மக்கள் எள்ளி நகையாடுகின்றனர். இதன் மூலம் தி.மு.க.வின் கொள்கைகள் பாரம்பரியத்தையே கருணாநிதி குழி தோண்டி புதைத்து விட்டார் என தி.மு.க.வின் முன்னோடிகள் புலம்புகின்றனர். றகாங்கிரசுக்கு எதிராக தி.மு.க.வை தொடங்கினார் அண்ணா. தி.மு.கவுக்கென புரட்சிகரமான கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அண்ணா உருவாக்கினார். சிறந்த பேச்சாளர்கள், நேர்மையான சிந்தனையாளர்கள், தியாகசீலர்களின் உழைப்பால் உயர்ந்தது தி.மு.க. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் கிடைத்தற்கரிய பொக்கிஷமாக தி.மு.க.விற்கு கிடைத்தவர் எம்.ஜி.ஆர்.
தமிழக சினிமா மற்றும் அரசியல் வரலாற்றில் இன்று வரை பிரிக்க முடியாத மறக்க முடியாத அங்கமாக திகழ்ந்து வருபவர் எம்.ஜி.ஆர். இறந்து 24 ஆண்டுகளாகியும் அரசியல் சினிமாவில் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்காதவர்களுக்கு எதிர்காலம் இல்லை என்றளவிற்கு புகழ் பெற்று விளங்குகிறார். எம்.ஜி.ஆரின் செல்வாக்கை , வளர்ச்சியை பொறுக்காத கருணாநிதி 1972 ல் எம்.ஜி.ஆரை தி.மு.கவில் இருந்து நீக்கினார். அதன் பின் விஸ்வரூபம் எடுத்த எம்.ஜி.ஆர் இன்று வரை மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அப்போதைய அரசியல் தலைவர்களான அண்ணா, ஈ.வெ. சம்பத், சத்யவாணி முத்து, மதியழகன், என்.வி. நடராஜன், சுப்பிரமணியன், பக்தவச்சலம், முத்துராமலிங் தேவர், மொரார்ஜி தேசாய், கக்கன், கல்யாண சுந்தரம், ராமமூர்த்தி, நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர் ஆகிய மாபெரும் மனிதர்களுடன் அரசியல் பயணம் செய்தவர் கருணாநிதி. 60 ஆண்டுகள் அரசியல் அனுபவம் பெற்ற கருணாநிதி 19 ஆண்டுகளாக முதல்வராக உள்ளார். கருணாநிதி ஆட்சியில் இருந்த போதெல்லாம் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்து மிகப் பெரிய செல்வந்தரானார்.
சர்க்காரியா கமிஷனால் குற்றம் சாட்டப்பட்டவர் கருணாநிதி. தற்போது மத்திய அரசில் தனது மகன், பேரன், உறவினர்களுக்கு முக்கிய பொறுப்புக்களை போராடி பெற்றவர். தொழில்நுட்ப ரீதியில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க. அமைச்சர் ராசா, ஈடுபட்டு அதன் மூலம் கிடைத்த பணத்தில் கருணாநிதி டி.வியை தொடங்கி விட்டார். தானும் தனது குடும்பத்தினரும் மட்டுமே லட்சம், கோடி, மில்லியன், பில்லியன் கணக்கில் சம்பாதித்து உலக கோடீஸ்வரர் வரிசையில் கருணாநிதியின் குடும்பத்தினர் இடம் பிடித்து விட்டனர். நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று 6 வது முறையாக முதல்வராகி தமிழகத்தில் உள்ள இயற்கை வளங்களை மீண்டும் கொள்ளையடித்து திட்டம் வகுத்து செயல்படுகிறார் கருணாநிதி.
கடந்த தேர்தல்களில் செய்த தில்லுமுல்லு, ஓட்டுக்கு பணம் கொடுத்தல், எதிர்க்கட்சியினரின் பூத் ஏஜண்டுகளை விலைக்கு வாங்குதல், பூத்களில் அதிகாரிகளை மிரட்டியோ, அல்லது அவர்களை விலைக்கு வாங்கியோ கள்ள ஓட்டுக்கள் போடுவது தேர்தலன்று வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவது ஆகிய செயல்களில் ஈடுபட்டு வெற்றியடைந்ததை போல் தற்போதைய தேர்தலிலும் வெற்றியடையலாம் என கனவு கண்டார். ஆனால் தேர்தல் கமிஷனோ கருணாநிதியின் ஆசை கனவில் மண்ணைப் போடுவது போன்று நேர்மையான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் துவங்கியுள்ளது. இதனால் தி.மு.க.வின் திட்டங்கள் ஈடுபடவில்லை. கருணாநிதியின் மகன் கேபினட் அரிதாரம் பூசியுள்ள அழகிரி தேர்தலில் பல்வேறு தில்லுமுல்லுகளை அரங்கேற்றி அவரது கைவாகனங்களுடன் தென் மாவட்டங்கள் முழுவதும் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.
அவர்களையும் தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதனால் முந்தைய தேர்தல்களை போன்று வெளிப்படையாக மக்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் தி.மு.க.வினர் திணறுகிறார்கள். ஒரு சில இடங்களில் தேர்தல் அதிகாரிகளுக்கு தெரியாமல் பணப்பட்டுவாடாவும் நடக்கிறது. பெரும்பாலான இடங்களில் தி.மு.கவின் பணப்பட்டுவாடாவை தேர்தல் அதிகாரிகள் தடுத்து வருகின்றனர். தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் உறவினரது வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணங்களையும் மக்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு சென்ற பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல தி.மு.க.வினர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மதுரை மேற்கு தொகுதியில் மக்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ 20 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளதாலும் கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் தொடரும் மின்வெட்டு, அனைத்து பொருட்களின் விலை உயர்வு, மணல், கிரானைட் கொள்ளை, தி.மு.க. அரசால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்களிடம் ஏற்பட்டுள்ள மவுன புரட்சி அ.தி.மு.க.விற்கு சாதகமாக அமைந்து அக்கூட்டணி அமோக வெற்றி பெறும் என பல்வேறு கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் ஆத்திரமும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்த கருணாநிதியும், அவரது மகன்களும் என்ன செய்வதென்று புரியாமல் குழப்பத்தில் உள்ளனர். எதையாவது செய்து தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும் என பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகர் வடிவேலுவை தி.மு.க. விற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறக்கி விட்டுள்ளனர். நடிகை குஷ்புவும் பிரச்சாரம் செய்கிறார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கும், வடிவேலுவுக்கும் ஏற்கனவே பிரச்சினை உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்தை நாகரீகமற்ற தரம் தாழ்ந்த வார்த்தைகளால் வடிவேலு திட்டி வருகிறார்.
இதனால் அவரது பேச்சை கேட்க கூடும் தி.மு.க கூட்டணியினரும் வேடிக்கை பார்க்க வந்தவர்களும் முகம் சுழிக்கின்றனர். தன்னிகரில்லா தலைவர்களுடன் அரசியல் நடத்திய கருணாநிதி இந்த தேர்தலில் தரம் தாழ்ந்து போய் நடிகர் வடிவேலு, குஷ்பு ஆகியோரை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தி இருப்பது வேதனைக்குரியது. தி.மு.க. ஆட்சியின் அவலங்களால் கொதிப்பில் உள்ள தமிழக மக்கள் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மரண அடி கொடுக்க தயாராகி வருகின்றனர் என்பதை அறியாத கருணாநிதி இது போன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடுகிறார் என தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்களே வெளிப்படையாக புலம்புகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்று முதல் இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்
26 Dec 2025சென்னை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்று முதல் இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் ரூ.139.41 கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
26 Dec 2025கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சியில் ரூ.139.41 கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவல்: தமிழகத்தில் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்: மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
26 Dec 2025சென்னை, கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவலால் தமிழ்நாட்டில் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் ரூ.1,045 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
26 Dec 2025விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பல்துறைகளின் சார்பில் 2,16,056 பயனாளிகளுக்கு ரூ.1,045 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு
-
உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
26 Dec 2025விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள ஆசனூர் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள காலணி உற்பத்தித் தொழிற்சாலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் வெள்ளிக்கி
-
கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி: நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மீது அமெரிக்க படை திடீர் தாக்குதல்
26 Dec 2025அபுஜா, நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மீது அமெரிக்க ராணுவம் பயங்கரவாதிகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் மதவெறி ஆட்டத்துக்கு இடமில்லை: கள்ளக்குறிச்சி அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
26 Dec 2025கள்ளக்குறிச்சி, எம்மதமும் சம்மதம் என்பதே தமிழ்நாடு. மதவெறி ஆட்டத்துக்கு இங்கு இடமில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் மத நல்லிணக்கம் பா.ஜ.க.வின் கண்களை உறுத்துகிறது.
-
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வேறொரு இந்தியா உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
26 Dec 2025கள்ளக்குறிச்சி, இந்து பக்தர்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் 'ரோஸ் மில்க்’ கொடுக்கின்றனர் என்று தெரிவித்த முதல்வர்மு.க.ஸ்டாலின், பா.ஜ.க.
-
தமிழ்நாடு சட்டசபை ஜன. 20-ல் கூடுகிறது
26 Dec 2025சென்னை, அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், 2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.
-
கள்ளக்குறிச்சிக்கு 8 புதிய அறிவிப்புகள்
26 Dec 2025கள்ளக்குறிச்சி, ரூ.10 கோடியில் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளிட்ட கள்ளக்குறிச்சிக்கு 8 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-12-2025.
26 Dec 2025 -
வங்கதேசத்தில் நியாயமான தேர்தலுக்கு இந்தியா ஆதரவு: மத்திய வெளியுறவுத்துறை தகவல்
26 Dec 2025புதுடெல்லி, வங்காள தேசத்தில் நியாயமான தேர்தலை ஆதரிக்கிறது என்று தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, அங்கு சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மிகவும் கவலைக்குரிய விஷயம
-
ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைக்க டிசம்பர் 31 கடைசி நாள்
26 Dec 2025புதுடெல்லி, பான் அட்டை வைத்திருப்பவர்கள், ஆதார் அட்டையுடன் இணைக்க டிச. 31ஆம் தேதியே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கனடாவில் இந்தியர் சுட்டுக்கொலை
26 Dec 2025ஒட்டாவா, கனடாவில் 20 வயது இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
நல்லகண்ணு பிறந்த நாள்: துணை ஜனாதிபதி வாழ்த்து
26 Dec 2025புதுடெல்லி, நல்லகண்ணு பிறந்த நாளை முன்னிட்டு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். எளிமையின் இலக்கணமாக வாழ்ந்து வருபவர் என்றும் அவர்
-
அ.தி.மு.க.வில் விருப்பமனு பெற அவகாசம் டிச. 31-வரை நீட்டிப்பு
26 Dec 2025சென்னை, அ.தி.மு.க.வில் விருப்பமனு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
ஒரு சவரன் தங்கம் விலை புதிய உச்சம்: வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 9,000 உயர்வு
26 Dec 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,03,120-க்கும் கிராமுக்கு ரூ.
-
உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும்: அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ வெளியீடு
26 Dec 2025கீவ், உக்ரைனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் அந்நாட்டு அதிபர் ஸெலென்ஸ்கி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் (புதின்) அழிந்து போகட்டும் என்பதுதான்.
-
விடுமுறை எதிரொலி: கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகளால் போக்குவரத்து நெரிசல்
26 Dec 2025திண்டுக்கல், விடுமுறை காரணமாக கொடைக்கானலில் தொடர்ந்து குவியும் சுற்றுலா பயணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி: ஒரே நாளில் 20 விக்கெட்டுகள் சரிவு
26 Dec 2025மெல்போர்ன், ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு சுருண்டது.
-
தமிழகத்தில் ஜனவரி 1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
26 Dec 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தூத்துக்குடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
26 Dec 2025சென்னை, தூத்துக்குடியில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.
-
வங்காள தேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்துக்கொலை
26 Dec 2025டாக்கா, வங்காள தேசத்தில், மேலும் ஒரு இந்து இளைஞர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
-
பீகாரைச் சேர்ந்த இளம் வீரர் சூரியவன்ஷிக்கு பால புரஸ்கார் விருது வழங்கினார் ஜனாதிபதி
26 Dec 2025புதுடெல்லி, இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு சிறார்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பால புரஸ்கார் விருது வழங்கி ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று (டிச.26)
-
கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரம்: தாய்லாந்து அரசு விளக்கம்
26 Dec 2025புதுடெல்லி, கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரத்தில் தாய்லாந்து விளக்கமளித்துள்ளது.


