முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவின் 3-வது அலையை சமாளிக்க தயாராக வேண்டும்: சுப்ரீம்கோர்ட் அறிவுறுத்தல்

வியாழக்கிழமை, 6 மே 2021      இந்தியா
Image Unavailable

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உக்கிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆக்சிஜன், தடுப்பூசி உள்ளிட்ட மருந்துகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரசின் மூன்றாம் அலை பரவ வாய்ப்பு உள்ளதால், அதை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் தயாராக இருக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது. 

3-வது அலை குழந்தைகளை கூட  தாக்கும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர், எனவே, கொரோனா 3-வது அலையை சமாளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. 

கொரோனா தொற்று நெருக்கடியைச் சமாளிக்க, சுகாதார கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டும், பயிற்சி முடித்த மருத்துவர்களை கொரோனா தடுப்பு பணியில் நியமிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை நீதிமன்றம் வலியுறுத்தியது.

கொரோனாவின் மூன்றாவது அலை அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு மத்தியில் பரவ வாய்ப்பு உள்ளதாகவும், இது குழந்தைகளை பெரிய அளவில் தாக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் நிலைமையை கையாள்வது தொடர்பான உத்திகளை வகுக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து