எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி கவுன்டி செலக்ட் XI அணியுடனான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. டர்ஹமில் நேற்று தொடங்கிய பயிற்சி ஆட்டத்தில் விக்கெட் கீப்பராக கே.எல். ராகுல் செயல்படவுள்ளார். கொரோனா காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்ட ரிஷப் பந்த் இந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.
அதேபோல உதவிப் பயிற்சியாளர் தயானந்த் கரானிக்கு கொரோனா ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருடன் தொடர்பில் இருந்த சஹா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ராகுல் தேர்வாகியுள்ளார்.
__________
தென் ஆப்பிரிக்கா வெற்றி
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. இதில் முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் நடைபெற்றது.
டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 165- ரன்கள் குவித்தது. 166- ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய அயர்லாந்து அணி 132- ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
____________
விஜய் நல்ல நடிகர்: ரெய்னா
தமிழ்நாடு ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் கமெண்டரியில் கலந்துகொண்ட கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளின்போது “இந்தி டப்பிங்கில் 'மாஸ்டர்' படத்தை எனது மகளுடன் மிகவும் ரசித்துப் பார்த்தேன். அவரது நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. விஜய் நல்ல நடிகர்” என்று குறிப்பிடுள்ளார்.
அதோடு, அதே பேட்டியில், ’தமிழில் பிடித்தப் பாடல் எது?’ என்று கேட்டதற்கு, ’முன்பே வா என் அன்பே வா’ பாடல் பிடிக்கும் என்று கூறிக்கொண்டே பாடிக்காட்டியதோடு சூர்யா தனது ஃபேவரைட் நடிகர் என்று குறிப்பிட்டுள்ளார்.
____________
'பால்' ட்விட்டால் பரபரப்பு
கோவிட் அச்சத்தினால் சமூக இடைவெளி முக்கியம் என்பதால் டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பாளர்கள் செக்ஸ் வைத்து கொள்ள முடியாத கார்ட் போர்டு கட்டிலை தயார் செய்துள்ளதாக அமெரிக்க தடகள வீரர் பால் கெலிமோ தன் ட்விட்டரில் தொடர்ச்சியாக அந்த செக்ஸுக்கு எதிரான கார்ட் போர்டு கட்டில் புகைப்படங்களை வெளியிட்டார். நியூயார்க் போஸ்ட்டும் அதே செய்தியை வெளியிட்டது.
அதாவது இந்த கார்டுபோர்டு கட்டில்கள் ஒருவருக்கு மேல் தாங்காது உடைந்து விடும் என்று அந்த செய்தி கூறியதோடு ஆன்டி-செக்ஸ் கட்டில் என்றும் அவர் ஒரு குண்டைத்தூக்கிப் போட்டார். ஆனால் அயர்லாந்து ஜிம்னாஸ்டிக் வீரர் ரைஸ் மெக்லினாகன் அந்த கட்டிலில் ஏறி எம்பிக்குதித்து கட்டில் வலிமையாக உள்ளது என்ற வீடியோவை வெளியிட்டு கார்ட்போர்டு கட்டில் ஒரு போலி செய்தி என்று தெரிவிக்க தடகள வீரர்கள் ‘அப்பாடா’ என்று பெருமூச்சு விட்டனர்.
____________
டி.என்.பி.எல் குறித்து அஸ்வின்
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின், டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் உள்ளார். தனக்கென்று தனியாக யூடியூப் சேனல் வைத்துள்ள அஸ்வின், டி.என்.பி.எல் போட்டி பற்றி தனியாக விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். டி.என்.பி.எல் போட்டியில் திண்டுக்கல் அணியில் அஸ்வின் இடம்பெற்றுள்ளார்.
டி.என்.பி.எல் போட்டி உருவான விதம், அந்தப் போட்டியில் வீரர்களை எப்படித் தேர்வு செய்வார்கள், இந்த வருடப் போட்டியில் சிறப்பாக விளையாடவுள்ள வீரர்கள் என டி.என்.பி.எல் போட்டி பற்றிய தனது எல்லாவிதமான கருத்துகளையும் தெரிவித்துள்ளார். தனது விடியோவில் பல வீரர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களுடைய திறமைகளையும் வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார் அஸ்வின்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
குடிமைப்பணி தேர்வுகளில் தேர்ச்சி பெறும் ஓ.பி.சி. தேர்வாளர்களுக்கு கூடுதல் பணியிடங்களை உருவாக்குங்கள் : மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
12 Mar 2026சென்னை, அரசியலமைப்பின் சமத்துவநெறியோடு செயல்பட்டு, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
-
சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: மத்திய கிழக்கில் போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் 3 நிபந்தனைகள்
12 Mar 2026தெஹ்ரான், மத்திய கிழக்கில் போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் 3 நிபந்தனைகளை விதித்துள்ளார்.
-
மிரட்டி, பணம் கொடுத்து வாங்க முடியாத ஒரே தலைவர் விஜய்தான்: ஆதவ் அர்ஜூனா பேச்சால் பரபரப்பு
12 Mar 2026சென்னை, எல்லாரையும் விலை கொடுத்து வாங்கலாம். எல்லாரையும் மிரட்டலாம். மிரட்டமுடியாத, பணம் கொடுத்து வாங்க முடியாது ஒரே தலைவர் என்றால் அது த.வெ.க.
-
சமையல் கியாஸ் சிலிண்டருக்கு நாட்டில் தட்டுப்பாடு ஏற்படாது: மத்திய அரசு விளக்கம்
12 Mar 2026புதுடெல்லி, நாடு முழுவதும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
-
த.வெ.க. உடன் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை என்பது கற்பனையே: எடப்பாடி பழனிசாமி மீண்டும் விளக்கம்
12 Mar 2026திருச்சி, த.வெ.க. உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்பது கற்பனையான ஒன்று.
-
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: சென்னையில் டீ, காபி விலை உயர்வு: மக்கள் கடும் அதிர்ச்சி
12 Mar 2026சென்னை, வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் டீ, காபி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
-
தூத்துக்குடியில் மாணவி கொலை வழக்கு: சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி ஐகோர்ட் கிளையில் மனு
13 Mar 2026தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்றக் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அ
-
தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு: கனிமொழி எம்.பி. தகவல்
13 Mar 2026தூத்துக்குடி, தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடுவார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி எம்.பி.. தேர்தல் அறிவிப்பே இன்னும் வரவில்லை.
-
ரூ.581.65 கோடி மதிப்பிலான அனில் அம்பானியின் சொத்துகள் முடக்கம்
13 Mar 2026புதுடெல்லி, கோவா, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.581.65 கோடி மதிப்பிலான
-
இந்திய பங்குச்சந்தைகள் 3-ம் நாளாக கடும் வீழ்ச்சி : ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு
13 Mar 2026மும்பை, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-ம் நாளாக நேற்று (மார்ச் 13) கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகமானது.


