முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விநாயகர் சதுர்த்தி: ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 10 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

விநாயகர் சதுர்த்தியையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் டுவிட்டரில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 

நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். கொரோனாவுக்கு எதிரான நம்முடைய முயற்சிகள் வெற்றி பெறவும், அனைவருக்கும் மகிழ்ச்சியையும் அமைதியையும் அருளவும் வாழ்த்துகிறேன். நாம் அனைவரும் கொரோனா-நட்புடன் நடந்து கொள்வோம் என்று பதிவிட்டுள்ளார்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார். அதில், நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். இந்த நல்ல நாளில் விநாயகர் அருள் அனைவருக்கு கிடைத்து அனைவருக்கும் மகிழிச்சி, அமைதி, அதிர்ஷ்டம், ஆரோக்கியம், ஆகியவை கிடைக்க வாழ்த்துகிறேன். கணபதி பாப்பா மோரியா !என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து