எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அடுத்த 15 வருடங்களில் உலகத்துக்கு அதிக நன்மைகளை செய்வதை பிரிக்ஸ் அமைப்பு உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி வலியறுத்தியுள்ளார்.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து ‘பிரிக்ஸ்' கூட்டமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த அமைப்பின் 13- வது உச்சி மாநாடு காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. 2012 மற்றும் 2016-ம் ஆண்டுக்கு பிறகு 3-வது முறையாக இந்த ஆண்டின் உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்தியது.
பிரிக்ஸ்' உச்சி மாநாட்டுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவது இது 2-வது முறையாகும். முன்னதாக 2016-ம் ஆண்டு கோவாவில் நடந்த மாநாட்டுக்கு அவர் தலைமை தாங்கினார்.
இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ, தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு, ‘தொடர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமித்த கருத்துக்கான பிரிக்ஸ் உள் ஒத்துழைப்பு’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நடைபெற்றது. ஆப்கன் விவகாரம் உட்பட சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக இந்த மாநாட்டில் ஆலோசனை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
பிரிக்ஸ் அமைப்பின் 15-வது ஆண்டு விழாவையொட்டி நடைபெறும் இந்த உச்சி மாநாட்டிற்கு தலைமை வகிப்பது எனக்கும் இந்தியாவுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய உச்சி மாநாட்டிற்கான விரிவான செயல்திட்டம் உங்கள் முன்னால் உள்ளது. நீங்கள் ஒப்புதல் அளித்தால் இந்த செயல்திட்டத்தை நாம் ஏற்றுக்கொள்ளலாம். நன்றி, செயல்திட்டம் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது.
இந்த தலைமை பொறுப்பின் போது அனைத்து பிரிக்ஸ் பங்குதாரர்கள் மற்றும் அனைவரிடமிருந்தும் முழு ஒத்துழைப்பை இந்தியா பெற்றது அதற்காக உங்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றி மிகுந்தவன் ஆவேன். கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு சாதனைகளை பிரிக்ஸ் தளம் சந்தித்துள்ளது. உலகின் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கான சக்தி மிகுந்த குரலாக இன்றைக்கு நாம் இருக்கிறோம். வளர்ந்து வரும் நாடுகளின் முன்னுரிமைகள் மீது கவனம் செலுத்துவதற்கும் பயனுள்ளதாக இந்த தளம் விளங்குகிறது.
புதிய வளர்ச்சி வங்கி, எதிர்பாராமல் ஏற்படும் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாடு மற்றும் எரிசக்தி ஆராய்ச்சி ஒத்துழைப்பு தளம் உள்ளிட்ட வலுவான அமைப்புகளை பிரிக்ஸ் உருவாக்கி உள்ளது. இவை அனைத்தும் மிகவும் வலுவான அமைப்புகள். நாம் பெருமைப்பட நிறைய இருக்கிறது என்பதில் சந்தேகம் ஏதுவுமில்லை. அதே சமயம், நாம் மிகவும் சுய-திருப்தி அடைந்து விடாமல், இன்னும் அதிக நன்மைகளை அடுத்த 15 வருடங்களில் பிரிக்ஸ் உருவாக்குவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
இந்த வருடம், கோவிட் ஏற்படுத்திய சவால்களுக்கு இடையிலும் 150-க்கும் அதிகமான பிரிக்ஸ் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன இவற்றில் 20-க்கும் அதிகமானவை அமைச்சர்கள் மட்டத்தில் ஆனவையாகும். பாரம்பரிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு, பிரிக்ஸ் செயல்திட்டத்தை மேலும் விரிவாக்கவும் நாம் முயற்சிகளை மேற்கொண்டோம். இதன் காரணமாக முதன்முறையாக பலவற்றை பிரிக்ஸ் சாதித்தது. முதல் முறையாக டிஜிட்டல் பிரிக்ஸ் உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் சுகாதார அணுகலை அதிகரிப்பதற்கான புதுமையான நடவடிக்கை இதுவாகும். வரும் நவம்பர் மாதத்தில், பிரிக்ஸ் கூட்டமைப்பின் கீழ் நமது நீர்வள அமைச்சர்கள் முதல் முறையாக சந்திக்க உள்ளார்கள். 'பல்முனை அமைப்புகளை வலுப்படுத்தி, சீர்திருத்துவதற்கான கூட்டு நிலை'-யையும் முதல் முறையாக பிரிக்ஸ் எடுத்துள்ளது.
பிரிக்ஸ் தீவிரவாத எதிர்ப்பு செயல் திட்டத்தையும் நாம் நிறைவேற்றியுள்ளோம். நமது விண்வெளி முகமைகளுக்கு இடையேயான தொலைதூர உணர் செயற்கைக் கோள்களின் கூட்டுஒத்துழைப்புக்கான புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது. நமது சுங்கத் துறைகளுக்கு இடையேயான கூட்டின் மூலம் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் எளிதாக நடைபெறும். மேலும், மெய்நிகர் பிரிக்ஸ் தடுப்பு மருந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை தொடங்குவதிலும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. பசுமை சுற்றுலாவுக்கான பிரிக்ஸ் கூட்டு மற்றுமொரு புதிய முன்முயற்சியாகும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தி.மு.க. தேர்தல் வாக்குறுதி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
25 Jan 2026சென்னை, தி.மு.க.வால் இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட தி.மு.க.
-
இன்று 77-வது குடியரசு தினம்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் இன்று கொடியேற்றுகிறாா்
25 Jan 2026சென்னை, இன்று 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் இன்று கொடியேற்றுகிறாா்.
-
இன்று 77-வது குடியரசு தினம்: தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
25 Jan 2026புதுடெல்லி, நாடு முழுவதும் குடியரசு தினம் இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை உள்பட நாடு முழுவதும் உச
-
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து-நடராசனுக்கு சிலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை
25 Jan 2026சென்னை, மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு தாளமுத்து - நடராசன் நினைவிடத்தில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தின
-
டபுள் என்ஜின் எனக்கூறி ஏமாற்ற முடியாது: டெல்லியின் ஆதிக்கத்துக்கு தமிழ்நாடு தலைகுனியாது: காஞ்சிபுரத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை
25 Jan 2026காஞ்சிபுரம், டபுள் என்ஜின் எனக்கூறி இனி தமிழக மக்களை மத்திய அரசு ஏமாற்ற முடியாது என்றும் 7-வது முறையாக தமிழகத்தில் தி.மு.க.
-
வங்கதேசத்தில் பயங்கரம்: மேலும் ஒரு இந்து வாலிபர் உயிரோடு எரித்துக் கொலை
25 Jan 2026டாக்கா, வங்க தேசத்தில் மேலும் ஒரு இந்து வாலிபர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே இன்று தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
25 Jan 2026தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே 200 ஏக்கரில் மிக பிரமாண்டமாக "வெல்லும் தமிழ் பெண்கள்" என்ற தலைப்பில் தி.மு.க.
-
தமிழகத்தில் அன்றும், இன்றும், என்றும் இந்திக்கு இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
25 Jan 2026சென்னை, அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு தமிழகத்தில் இடமில்லை என்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழுக்காகத் தங
-
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக காவல்துறை அதிகாரிகள், பணியாளர்களுக்கு பதக்கங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
25 Jan 2026சென்னை, 2026-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வரின் மெச்சத்தக்க நுண்ணறிவுப் பதக்கம் மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பதக்கம்’ வழங்க மு.க.ஸ்டாலின் ஆ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –27-01-2026
26 Jan 2026


