முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்க திட்டம் விண்வெளித் துறை தகவல் -

ஞாயிற்றுக்கிழமை, 19 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3, எஸ்.எஸ்.எல்.வி. ஆகிய இரண்டு ராக்கெட்டுகளை முழுவதும் இந்தியத் தொழில்நிறுவனங்களிடம் தயாரித்துப் பெறுவதற்கு விண்வெளித்துறை திட்டமிட்டுள்ளது. 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் வணிகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனம் உள்நாட்டிலேயே பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை முழுவதும் தயாரிக்க விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பங்களை 3 நிறுவனங்களிடம் இருந்து பெற்றுள்ளது. 

எச்.ஏ.எல் - எல் அண்டு டி, பி.இ.எல் - அதானி - பி.இ.எம்.எல், பெல் ஆகியன இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக நியூஸ்பேஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இவற்றைப் பரிசீலித்து ஏதேனும் ஒரு நிறுவனத்தைத் தேர்வு செய்யும் நடைமுறை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் முடிவடையும் என்றும், தேர்வாகும் நிறுவனத்துக்கு 5 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் பொறுப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதன்பின் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டைத் தயாரிக்க விரும்பும் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்றும் தெரிவித்தார். இஸ்ரோவால் தயாரிக்கப்பட்டு வரும் எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் திட்டம் வெற்றிபெற்று விட்டால், தொழில் நிறுவனங்களிடம் ராக்கெட் தயாரிக்க ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து