எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,ஏப்.12 - தமிழகத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அனல் பறக்கும் வகையில் நடந்த தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் ஒலிபெருக்கி சத்தம் உள்பட அனைத்து சத்தங்களும் ஓய்ந்தன. நாளை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கி 5 மணிக்கு முடிகிறது.
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதேபோல் மேற்குவங்கம், அசாம், கேரளம், புதுவை மாநிலங்களிலும் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வந்தது. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் பணிகளை முடுக்கிவிட்டன. வழக்கமாக சுமூகமாக நடக்கும் இந்த பணி இந்த முறை எல்லா தரப்பிலுமே முதலில் சிக்கலில் தொடங்கி பின்னர் சுமூகமாக முடிந்தது.
அதன்பிறகு கடந்த 24-ம் தேதி அனைத்துக்கட்சி வேட்பாளர்களும் மனுத்தாக்கல் செய்தனர். ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, திருவாரூரில் போட்டியிடும் முதல்வர் கருணாநிதி, ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் கடந்த 24-ம் தேதி மனுத்தாக்கல் செய்தனர். அதேபோல் அந்தந்த கட்சி வேட்பாளர்களும் மனுத்தாக்கல் செய்தனர். கடந்த 30-ம் தேதி மனுக்கள் வாபஸ் பெறப்பட்டு இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு தேர்தல் பிரசாரம் தொடங்கியது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா திருச்சியில் தொடங்கி பிறகு கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, ராமநாதபுரம், கடலூர், விழுப்புரம் போன்ற இடங்களில் பிரசாரம் செய்துவிட்டு கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார். நேற்றுமாலையுடன் அவர் தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டார். இதேபோல் திருவாரூரில் பிரசாரம் தொடங்கிய கருணாநிதி அதே ஊரில் நேற்று பிரசாரத்தை முடித்துக்கொண்டார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தும் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். இரு தரப்பிலுமே பல்வேறு நடிகர், நடிகைகளும் பிரசாரம் செய்தனர். இதனால் பிரசாரத்தில் சூடு பிடித்தது. கனல் தெறிக்கும் வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொண்டனர். இப்படி கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் தலைவர்கள் பிரசாரம் செய்தனர். ஒருபக்கம் கோடை வெய்யிலின் வெப்பம். இன்னொரு பக்கம் பிரசாரத்தால் ஏற்பட்ட வெப்பம். இப்படி அனல் பறக்கும் வகையில் நடந்த பிரசாரம் நேற்றுமாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது. இந்த தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கைகளை எடுத்தது. கடந்த பல நாட்களாக நடந்த வாகன சோதனையில் ரூ. 40 கோடி வரை சிக்கியுள்ளது.ஓட்டுப்போட பணம் கொடுத்தாலும் அதை பெற்றாலும் ஓராண்டு சிறை என்று தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது. மேலும் தேர்தலை அமைதியாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவை இன்று மாலைக்குள் வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் இன்று மாலையே பூத்களுக்கு சென்றுவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடிகளில் வெப் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பதட்டமான இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக துணைராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள் உள்பட 2773 பேர் களத்தில் உள்ளனர். நாளை காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. வழக்கமாக வாக்குப்பதிவு காலை 7 மணிக்கே தொடங்கும். ஆனால் இம்முறை வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் தாமதமாக காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இடைவிடாமல் நடக்கிறது. தேர்தல் முடிவை தெரிந்துகொள்ள ஒரு மாதம் காத்திருக்க வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தி.மு.க. தேர்தல் வாக்குறுதி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
25 Jan 2026சென்னை, தி.மு.க.வால் இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட தி.மு.க.
-
இன்று 77-வது குடியரசு தினம்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் இன்று கொடியேற்றுகிறாா்
25 Jan 2026சென்னை, இன்று 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் இன்று கொடியேற்றுகிறாா்.
-
இன்று 77-வது குடியரசு தினம்: தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
25 Jan 2026புதுடெல்லி, நாடு முழுவதும் குடியரசு தினம் இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை உள்பட நாடு முழுவதும் உச
-
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து-நடராசனுக்கு சிலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை
25 Jan 2026சென்னை, மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு தாளமுத்து - நடராசன் நினைவிடத்தில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தின
-
டபுள் என்ஜின் எனக்கூறி ஏமாற்ற முடியாது: டெல்லியின் ஆதிக்கத்துக்கு தமிழ்நாடு தலைகுனியாது: காஞ்சிபுரத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை
25 Jan 2026காஞ்சிபுரம், டபுள் என்ஜின் எனக்கூறி இனி தமிழக மக்களை மத்திய அரசு ஏமாற்ற முடியாது என்றும் 7-வது முறையாக தமிழகத்தில் தி.மு.க.
-
வங்கதேசத்தில் பயங்கரம்: மேலும் ஒரு இந்து வாலிபர் உயிரோடு எரித்துக் கொலை
25 Jan 2026டாக்கா, வங்க தேசத்தில் மேலும் ஒரு இந்து வாலிபர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே இன்று தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
25 Jan 2026தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே 200 ஏக்கரில் மிக பிரமாண்டமாக "வெல்லும் தமிழ் பெண்கள்" என்ற தலைப்பில் தி.மு.க.
-
தமிழகத்தில் அன்றும், இன்றும், என்றும் இந்திக்கு இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
25 Jan 2026சென்னை, அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு தமிழகத்தில் இடமில்லை என்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழுக்காகத் தங
-
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக காவல்துறை அதிகாரிகள், பணியாளர்களுக்கு பதக்கங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
25 Jan 2026சென்னை, 2026-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வரின் மெச்சத்தக்க நுண்ணறிவுப் பதக்கம் மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பதக்கம்’ வழங்க மு.க.ஸ்டாலின் ஆ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –27-01-2026
26 Jan 2026 -
நாடு முழுவதும் 77-வது குடியரசு தின விழா கோலாகலம்: தேசியக்கொடியை ஏற்றினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
26 Jan 2026புதுடெல்லி, நாட்டின் 77-வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
தமிழ்நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் டெல்லியில் ஜல்லிக்கட்டு காளையுடன் அணிவகுத்த தமிழ்நாடு அரசின் வாகனம்
26 Jan 2026புதுடெல்லி, குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி கடமை பாதையில் ஜல்லிக்கட்டு காளையுடன் தமிழ்நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும்


