முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் - புள்ளிகள் பட்டியல் தரவரிசையை மாற்றிய 'வார இறுதி ஆட்டங்கள்'

திங்கட்கிழமை, 27 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய்: நடப்பு ஐ.பி.எல் லீக் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் அணிகளின் தரவரிசையை 'வார இறுதி ஆட்டங்கள்' மாற்றியது என்றே சொல்லாம்.

சென்னை அணி...

கடந்த வெள்ளியன்று ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சென்னை சூப்பா் கிங்ஸ் அணி. இதையடுத்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு மீண்டும் முன்னேறியது சென்னை. சனி, ஞாயிறு என  வார இறுதி ஆட்டங்களுக்கு முன்பு புள்ளிகள் பட்டியலில் அணிகளுக்குக் கிடைத்த இடங்கள் வருமாறு., 1. சென்னை 2. டெல்லி, 3.பெங்களூர், 4. கொல்கத்தா, 5. ராஜஸ்தான், 6. மும்பை, 7. பஞ்சாப், 8. ஐதராபாத்.

பெரிய மாற்றங்கள்...

ஆனால் வார இறுதி ஆட்டங்களில் நடைபெற்ற 4 ஆட்டங்களும் புள்ளிகள் பட்டியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. முதல் இடத்தில் சென்னையும் கடைசி இடத்தில் ஐதராபாத்தும் நீடிக்கின்றன. அதேபோல முதல் நான்கு இடங்களிலும் மாற்றம் ஏற்படவில்லை. ஆனால் 5,6,7 இடங்களில் பெரிய மாற்றம் ஏற்பட்டு விட்டது. மீண்டும் போட்டியை வெல்லும் என்று கணிக்கப்பட்ட மும்பை அணி தொடர் தோல்விகளால் 7-ம் இடத்துக்கு இறங்கிவிட்டது. 5-ம் இடத்துக்கு பஞ்சாப் முன்னேறிவிட்டது. ராஜஸ்தான் 6-ம் இடத்துக்கு இறங்கிவிட்டது. இதனால் ஐ.பி.எல் போட்டி எதிர்பாராத திருப்பத்தைச் சந்தித்துள்ளது.

பரபரப்பாக...

சன்ரைசர்ஸ் - ராஜஸ்தான் நேற்று மோதின. மற்ற அணிகள் அனைத்தும் தலா 10 ஆட்டங்களில் விளையாடிவிட்டன.  ராஜஸ்தான் வெற்றி பெற்றால் இதனால் பிளேஆஃப் சுற்றில் இடம்பெற அதிகமாக மெனக்கெட வேண்டிய நிலைமையில் உள்ள கொல்கத்தா, பஞ்சாப், மும்பை அணிகளுக்குக் கடும் நெருக்கடி ஏற்படும். இன்னும் 12 நாள்களில் லீக் சுற்று முடிவடைய உள்ளதால் இனிவரும் ஆட்டங்கள் மேலும் பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

புள்ளிகள் பட்டியல்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து