முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

நாசாவின் ரோவரை தரையிறங்க செய்த இந்திய பெண் சுவாதி

Image Unavailable

செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததா என்பது குறித்து ஆராய நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கியது. அங்கிருந்து தண்ணீரின் வழித்தடங்களை படமெடுத்து உலகை வியப்பில் ஆழ்த்தியது. அதெல்லாம் சரி.. அதை விட முக்கியம் அதை தரையிறங்க செய்த குழுவின் தலைவர் யார் தெரியுமா.. சுவாதி மோகன் என்ற இளம் பெண். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவரது பெற்றொர் பெங்களுரைச் சேர்ந்தவர்கள்.

சிறு வயதிலேயே பெற்றோர் அவரது அமெரிக்கா வந்துவிட்டனர். சுவாமி தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை வடக்கு வெர்ஜீனியா-வாஷிங்டன் மெட்ரோ பகுதியில்தான் கழித்தார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் இயந்திர மற்றும் விண்வெளி பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்

 

ஏரோநாட்டிக்ஸ் / வானியல் துறையில் எம்ஐடியிலிருந்து எம்.எஸ் மற்றும் பி.எச்.டி படிப்பை முடித்தபோது அவருக்கான பரந்த உலகம் திறந்திருந்தது. நாசாவில் பணிக்கு சேர்ந்தது முதலே ஏற்றம்தான். அங்கு படிப்படியாக விரைவாக முன்னேறி பெர்சிவரன்ஸ் ரோவர் தரையிறங்கும் குழுவின் தலைமை பொறுப்புக்கு வந்தார். வெற்றிகரமாக சாதித்தும் காட்டியுள்ளார். இதற்கெல்லாம் உந்துதலாக இருந்தது எது என்று கேட்டால், சிறுவயதில் தான் பார்த்த சயின்ஸ் பிக்சன் தொடரான ஸ்டார் டிரக்தான் என்கிறார் சிரித்தபடி. ஹேட்ஸ் ஆப் சுவாதி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago