முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் மருத்துவமனை அருகே நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 25 பேர் பலி

புதன்கிழமை, 3 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

ஆப்கானிஸ்தானில் ராணுவ ஆஸ்பத்திரி அருகே நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 25 பேர் பலியாயினர். 

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் 20 ஆண்டுகளுக்கு பிறகு வெளியேறியது. இதையடுத்து அங்கு மீண்டும் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை பிடித்தனர். அவர்களது அரசை இன்னும் உலகநாடுகள் அங்கீகரிக்கவில்லை. 

இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் மசூதிகளில் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

இதையடுத்து ஐ.எஸ். அமைப்பினர் மீது தலிபான்கள் தாக்குதலை நடத்த தொடங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரி அருகே வெடிகுண்டுகள் வெடித்தன. இரண்டு சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததால் காபூல் நகரமே அதிர்ந்தது.

மேலும் அங்கு துப்பாக்கி சூடும் நடந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினார்கள். பலர் குண்டு வெடிப்பில் சிக்கி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தனர். உடனே போலீசார் மற்றும் மீட்பு படையினர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த இரட்டை குண்டுவெடிப்பில் 25 பேர் பலியானார்கள். 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து