முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2022-ம் ஆண்டின் 15-வது ஐ.பி.எல். டி20-யின் முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது

புதன்கிழமை, 24 நவம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

2022ம் ஆண்டு நடக்கும் 15-வது ஐ.பி.எல் டி-20 சீசன் சென்னையில் ஏப்ரல்-2ம் தேதி தொடங்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அகமதாபாத், லக்னோ என்ற இந்த இரண்டு புதிய அணிகள் சேர்ந்துள்ளதால் தொடர் 60 நாட்களையும் தாண்டி நடைபெறும் என்று தெரிகிறது.

டிசம்பரில் ஏலம்...

15-வது ஐ.பி.எல் டி-20 சீசன் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. தற்போது 8 அணிகள் இருக்கும் நிலையில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட உள்ளன. இந்த 10 அணிகளுக்கான ஏலம் அடுத்த மாதத்தில் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. 15-வது ஐ.பி.எல் சீசனில் அகமதாபாத், லக்னோ என்ற இந்த இரண்டு புதிய அணிகள் சேர்ந்துள்ளதால் தொடர் 60 நாட்களையும் தாண்டி நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் 15-வது சீசனுக்கான ஐ.பி.எல் அட்டவணை தயாராகவில்லை என்றாலும் ஐ.பி.எல் அணி நிர்வாகங்களுக்கு பிசிசிஐ சார்பில் இந்த தகவல் பகிரப்பட்டுள்ளதாக ஆங்கில இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது.

14 போட்டிகள்...

இரண்டு புதிய அணிகள் வந்திருப்பதால் ஐ.பி.எல் தொடர் வழக்கமாக 2 மாத அளவு நடைபெறுவது 60 நாட்களையும் தாண்டிச் செல்லும் என்று தெரிகிறது. இறுதிப் போட்டி ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெறலாம் என்று தெரிகிறது. தற்போதைய வடிவத்தின் படி ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் ஆடும், 7 போட்டிகள் சொந்த மண்ணில் 7 போட்டிகள் வெளி மண்ணில் ஆட வேண்டும்.

சென்னையில்... 

ஐ.பி.எல் 2021 சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் போட்டியை நடத்தும் உரிமையைப் பெற்றுள்ளதால் சென்னையில் முதல் போட்டி நடைபெறும். எதிரணி வழக்கம் போல் மும்பை இந்தியன்ஸ் ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஐ.பி.எல் 2020 முழுதும் யு.ஏ.இ.யில் நடைபெற, ஐ.பி.எல் 2021 தொடர் பாதி இந்தியாவிலும் பாதி யு.ஏ.இ.யிலும் நடைபெற்றது. 2022 சீசன் முழுதும் இந்தியாவில் நடைபெறும் என்று ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதற்கான மெகா வீரர்கள் ஏலம் டிசம்பரில் நடைபெறும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து