முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உருமாறிய புதிய கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது : ராகுல் காந்தி டுவிட்

சனிக்கிழமை, 27 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : உருமாறிய புதிய கொரோனா  வைரஸ் மிகவும் ஆபத்தானது என்றும், நாட்டு மக்களுக்கு தடுப்பூசி பாதுகாப்பை அளிப்பதில் இந்திய அரசாங்கம் தீவிரமாக  இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உருமாற்றம் அடைந்த புதிய ’ஒமைக்ரான்’ (B.1.1.529) வகை கொரோனா உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உருமாற்றம் அடைந்த புதிய  ’ஒமைக்ரான்’  (B.1.1.529) வகை கொரோனா  உலக  நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.  தென்னாப்பிரிக்காவைத் தொடர்ந்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் கால் பதித்துள்ளது. இதுவரை 60 பேருக்கு இந்த உருமாறிய வைரஸ் பாதித்து இருக்கிறது.

சர்வதேச பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என இந்திய அரசும் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், வரும் 15 ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்க மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ள சூழலில், புதிய வகை கொரோனா மிரட்டுவதால்  சர்வதேச விமான போக்குவரத்துக்கு சேவையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தியதை ஆய்வு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த நிலயில், தடுப்பூசி செலுத்துவதில் இந்திய அரசு கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், புதிய வகை கொரோனா மிகவும் அச்சுறுத்தலானது.  நாட்டு மக்களுக்கு தடுப்பூசி  பாதுகாப்பை அளிப்பதில் இந்திய அரசாங்கம் தீவிரமாக  இருக்க வேண்டும். குறைந்த  அளவில் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கையை வெளியிடுவதில் எந்த வித ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது எனத்தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து