எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் வரும் 31-ம் தேதி வைர நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி 14-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று ஆய்வுக்கூட்டத்துக்கு பின் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் மற்றும் இதர நாட்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா – ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், பொது மக்கள் நலன் கருதியும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு பின்வரும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் 31-1-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும்.
அதன்படி 14-01-2022 முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
16-ம் தேதி முழு ஊரடங்கு:
வரும் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு.
பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75 சதவீதம் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். தற்போது ஊரடங்கு காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருந்து, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பணிபுரிபவர்கள், உரிமையாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். அனைத்து கடைகளும் குளிர் சாதன வசதியை தவிர்க்கவும், வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் போது சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்கவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசியச் செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை. நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தீவிரமாக நோய்த் தொற்றுப் பரவலை வீடு வீடாகக் கண்காணிக்க குழுக்கள் அமைத்துக் கண்காணிக்கப்படும்.
கொரோனா நோய்த் தொற்றுக் கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும்.
தற்போது கொரோனா நோய் வேகமாக பரவி வருவதால், பொது இடங்களில் கொரோனா தடுப்பு நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படுவதை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் கொரோனா நோய்த் தடுப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் தொடர்ந்து செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள் / கடைகளை மூட பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மாவட்ட நிருவாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று தடுப்பூசியினை கட்டாயம் செலுத்திக் கொள்ளுமாறு பொது மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: சிங்கப்பூரில் இந்தியருக்கு 4 ஆண்டு சிறை
22 Sep 2025சிங்கப்பூர், சிங்கப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியருக்கு சாட்டையடி தண்டனையும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
-
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 13 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தேர்வு செய்யப்பெற்ற 13 நபர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்கு
-
சார்லி கிர்க் துக்க நிகழ்ச்சி: ட்ரம்ப் - எலான் மஸ்க் சந்திப்பு
22 Sep 2025வாஷிங்டன் : கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான வார்த்தை மோதல்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ
-
கைபர் பக்துன்வாவில் பாக். விமானப்படை குண்டுவீச்சு : 30 அப்பாவி மக்கள் உயிரிழப்பு
22 Sep 2025இஸ்லாமாபாத் : பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையாக கைபர் பக்துன்வாவில் பாகிஸ்தான் விமானப்படை குண்டுவீசியதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது : அமுதா ஐ.ஏ.எஸ். தகவல்
22 Sep 2025சென்னை : கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில் 7 திட்டங்களை உள்ளடக்கி சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுமென அமுதா ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.
-
விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் 4 பேருக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்கள் 4 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
மணிப்பூரில் 3 பயங்கரவாதிகள் கைது
22 Sep 2025இம்பால் : மணிப்பூரில் பயங்கரவாதிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
இஸ்ரேல் திடீர் டிரோன் தாக்குதல்: லெபனானில் 5 பேர் பலி
22 Sep 2025பெய்ரூட் : லெபனானில் இஸ்ரேலின் டிரோன் தாக்குதலில் அமெரிக்க குடிமக்களான 3 குழந்தைகள் மற்றும் அவர்களுடைய தந்தை பலி ஆனார்கள்.
-
சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார்: விஜய் மீது அப்பாவு விமர்சனம்
22 Sep 2025நெல்லை : சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார் என்றும், விஜய்க்கு அகந்தை அதிகமாக உள்ளது என்றும் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.
-
3.2 ரிக்டர் அளவில் அருணாச்சல்லில் நிலநடுக்கம்
22 Sep 2025இடாநகர் : 3.2 ரிக்டர் அளவில் அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
கர்நாடகா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்
22 Sep 2025பெங்களூரு : கர்நாடகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2010-ம் ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
-
ஆபரேஷன் சிந்தூர் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்: ராஜ்நாத் சிங்
22 Sep 2025ரபாத் : மொராக்கோ பாதுகாப்புத்துறை மந்திரி அப்தெல்டிப் லௌடியின் அழைப்பின் பேரில் 2 நாள் அரசு முறைப்பயணமாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மொராக்கோ சென்றுள்ளார்.
-
சாத்தியமற்றதை சாத்தியமாக்குகிறார்: பிரதமர் மோடி துணை ஜனாதிபதி புகழாரம்
22 Sep 2025புதுடெல்லி : சாத்தியமற்றதை பிரதமர் மோடி சாத்தியமாக்குவதாக துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2025.
23 Sep 2025 -
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.