எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 நாட்களாக மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் நேற்று திறக்கப்பட்டன. இதனால் திருச்செந்தூர் ஊள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் உற்சாகத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அதிகரித்துவருவதால் மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு கூடுதலாக மேலும் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.
இதன்படி மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் ஜன.31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75 சதவீதம் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் கோயில்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பொங்கல் பண்டிகை நாட்களான 14ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது.
பொங்கல் மற்றும் தைப்பூச நாட்களில் அதிகளவிலான பக்தர்கள் செல்லும்போது கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்ற முடியாத நிலைமை ஏற்படும். இதனால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் சூழல் ஏற்படும் என்பதால் பொங்கல் விழா நாட்களில் கோயில்களில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அனைத்து கோயில்கள், பேராலயங்கள், மசூதிகள் மூடப்பட்டிருந்தன.
இந்தநிலையில் 5 நாட்களுக்கு பின் நேற்று அதிகாலை அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு கொரோனா விதிகளை பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். திருச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில், மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்பட அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடந்தது.
பக்தர்கள் உற்சாகத்துடன் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மெயின்கார்டு கேட்டில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம், நத்தர் வலி தர்கா, நாகையில் நாகூர் ஆண்டவர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம், தஞ்சை பெரியகோயில் திறக்கப்பட்டது. பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில், காட்டுப்பாவா பள்ளிவாசல் திறக்கப்பட்டன. மயிலாடுதுறை, திருவாரூர், அரியலூர், கரூர், பெரம்பலூர், காரைக்கால் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தைப்பூசத் தினமான நேற்று வராத பக்தர்கள் நேற்று திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர். பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் பால் குடம் எடுத்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
வருகிற 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் புதிய கட்சியை தொடங்குகிறார் சசிகலா
15 Feb 2026மதுரை, வருகிற 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் புதிய கட்சியை சசிகலா தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா விஸ்வாவின் சா்ச்சை வீடியோ குறித்து இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
15 Feb 2026புதுடெல்லி, அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, முஸ்லிம் சமூகத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போன்ற சா்ச்சை காணொலிக் காட்சி தொடா்பாக தொடரப்பட்ட மனுக்களை சுப்ரீம்
-
உ.பி.: தலித் இளைஞர் கொலை வழக்கில் 3 குற்றவாளிகள் கைது: என்கவுன்டரில் 2 பேருக்கு காயம்
15 Feb 2026லக்னோ, உத்தரப் பிரதேசத்தில் தலித் இளைஞர் கொலை வழக்கில் மூன்று குற்றவாளிகள் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்
-
பெங்களூரில் விபத்து - 5 இளைஞர்கள் பலி
15 Feb 2026பெங்களூரு, பெங்களூரில் வேகமாக வந்த கார், பேருந்து மீது மோதியதில் இளைஞர்கள் 5 பேர் பலியாகினர்
-
அறியாமையின் உச்சத்தில் இருக்கிறார்: விஜய் மீது அமைச்சா் விமர்சனம்
15 Feb 2026கோவை, த.வெ.க. தலைவைர் விஜய் அறியாமையின் உச்சத்தில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
பாரதம் செழிப்பின் உச்சம் அடையட்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து
15 Feb 2026புதுடெல்லி, சிவபெருமானின் ஆசியால் நமது பாரதம் செழிப்பின் உச்சத்தில் அரியணையிட்டு நிலைத்திருக்கட்டும் என்று மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து
-
மறுதணிக்கை செய்வதில் தாமதம்: ஜூன் மாதம் ஜனநாயகன் வெளியீடு?
15 Feb 2026சென்னை, மறுதணிக்கைக்காக ஜன நாயகன் அனுப்பப்பட்ட நிலையில் திரைப்படத்தை தணிக்கை வாரியம் இன்னமும் மறுதணிக்கைக்காக திரைப்படத்தைப் பார்க்காததால் படம் ஜூன் மாதம் அதாவது தேர்தல
-
விஜய்-திரிஷா குறித்த அவதூறு பேச்சு: நயினாருக்கு ராமதாஸ் கண்டனம்
15 Feb 2026சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி பேசிய நயினார் நாகேந்திரனுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்: 4 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சாமி தரிசனம்
15 Feb 2026தூத்துக்குடி, விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
-
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்புகிறார்: ராகுல் மீது அமித் ஷா குற்றச்சாட்டு
15 Feb 2026புதுடெல்லி, வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி பொய் பரப்புகிறார்.
-
கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா: ராஜ்நாத்சிங் பங்கேற்பு
15 Feb 2026கோவை, கோவை ஈஷா யோக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.15) நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
-
வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு மனித நேய மக்கள் கட்சி தீர்மானம்
15 Feb 2026சென்னை, 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக மனித நேய மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
2024-25 நிதியாண்டில் மட்டும் தோ்தல் அறக்கட்டளைகள் திட்டத்தில் கட்சிகளுக்கு ரூ.3,826 கோடி நன்கொடை: அதிகபட்சமாக பா.ஜ.க.வுக்கு 82 சதவீதமாம்
15 Feb 2026புதுடெல்லி, தோ்தல் அறக்கட்டளைகள் (எலக்டோரல் டிரஸ்ட்) திட்டத்தில் 2024-25 நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு ரூ.3,826.35 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக ஜனநாயக சீா்திருத
-
இந்தியாவில் அமையும் முதல் நீருக்கடியில் செல்லும் சாலை - ரயில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
15 Feb 2026புதுடெல்லி, இந்தியாவின் முதல் நீருக்கடியில் அமையவுள்ள சாலை-ரெயில் சுரங்கப்பாதை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
சபரிமலையில் பெண்கள் அனுமதி விவகாரம்: மறுஆய்வு மனுக்களை இன்று பரிசீலிக்கிறது சுப்ரீம் கோர்ட்
15 Feb 2026திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி தாக்கல் செ
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்குமா..? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில்
15 Feb 2026முனிச், அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தப்படி ரஷ்ய எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்துமா அல்லது தொடந்து வாங்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெய்சங்கர், "எண்ணெய் நிறுவனங்கள
-
மாசி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலையில் குவிந்த பக்தர்கள்
15 Feb 2026சபரிமலை, சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் மட்டுமின்றி மாதாந்திர பூஜைகளுக்காக நடை திறக்கப்படும் காலத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காண
-
மூன்று நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இன்று இந்தியா வருகிறார்
15 Feb 2026புதுடெல்லி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அவரது மனைவி மேடம் பிரகிட் மேக்ரான் ஆகியோர் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகின்றனர்.
-
ஜெர்மனி, முனிச் பாதுகாப்பு மாநாட்டில் ஜெலன்ஸ்கி - ரூபியோ முக்கிய பேச்சுவார்த்தை
15 Feb 2026முனிச், ஜெர்மனியில் நடைபெறும் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும் சந்தித்து முக்கிய பேச
-
வங்கதேசத்தில் புதிய அரசு நாளை பதவியேற்கிறது: இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் பங்கேற்பு
15 Feb 2026டாக்கா, வங்கதேச புதிய பிரதமராக பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்கும் விழாவில் இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பங்கேற்க உள்ளதா


