முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடும் பனிபொழிவு எதிரொலி:ஆப்கனில் 42 பேர் உயிரிழப்பு

திங்கட்கிழமை, 24 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவின் காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் மற்றும் மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் ஆப்கானிஸ்தானின் 15 மாகாணங்களில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவின் காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 76 பேர் காயமடைந்துள்ளதாகவும் கடந்த 20 நாட்களில் 2000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

இது குறித்து கூறிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவி வழங்கப்பட்டு வருகிறது. பேரிடர்களை தடுக்கும் வகையில் அதிகாரிகள் கடுமையாக உழைத்து வருவதாக கூறினர். பனிப்பொழிவினால் நெடுஞ்சாலைகளில் மாட்டிக் கொண்டுள்ள நூற்றுக்கணக்கான மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த வாரத்தில் மேற்கு பத்கிஸ் மாகாணத்தில் 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு 28 பேர் உயிரிழந்தனர். 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இந்த நிலையில் தற்போது உறையவைக்கும் குளிர் மற்றும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து