முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-கஜகஸ்தான் இடையே சிவில் அணுசக்தி ஒப்பந்தம்

சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

அஸ்தானா,ஏப்.17 - இந்தியா-கஜகஸ்தான் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. அதில் சிவில் அணுசக்தி ஒப்பந்தமும் ஒன்றாகும். சீனாவின் கிழக்கு கடற்கரை நகரான சான்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டார். அதனையடுத்து முன்னாள் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த கஜகஸ்தான் நாட்டிற்கு மன்மோகன் சிங் சென்றார். அங்கு அந்த நாட்டு அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர்களை மன்மோகன் சிங் சந்தித்து பேசினார். 

கஜகஸ்தான் அணுசக்தி உற்பத்தியில் முன்னேறிய நாடாகும். அதனால் அந்த நாட்டுடன் இந்தியா சிவில் அணுசக்தி ஒப்பந்தம் நேற்று செய்துகொண்டுள்ளது. அமைதி காரியங்களுக்கும் ஆக்கப்பூர்வமான காரியங்களும் அணுசக்தியை பயன்படுத்த இந்த ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் இருநாடுகளிடையே உறவு தொடர்ந்து வளர வகை செய்யப்பட்டுள்ளது. சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை தவிர சட்டம்,சிவில் விவகாரம், ஆயில் தோண்டி எடுப்பது தொடர்பாகவும் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. மேலும் தொழில்நுட்பம், விவசாயம், சுகாதாரம் ஆகிய துறைகளிலும் இருநாடுகளிடையே எதிர்காலத்தில் ஒப்பந்தம் ஏற்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அதிபர் நூர்சுல்தான் நாசர்பாயேவ்வை மன்மோகன் சிங் சந்தித்து பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago