எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு முதல் தரமான கச்சா எண்ணெயில் பீப்பாய் ஒன்றுக்கு 35 டாலர்கள் தள்ளுபடி விலையில் வழங்க ரஷ்யா முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி டாலர்கள் இல்லாமல் ரூபிள்- ரூபாயில் பரிவர்த்தனை செய்யவும் ரஷ்யா தயாராக உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷ்யா முன் வந்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவும் ஆயத்தம் ஆகி வருகிறது. முதல்கட்டமாக 30 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் வாங்க இந்தியன் ஆயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது செய்யப்படும் ஒப்பந்தம் தொடர்பாக புதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி போருக்கு முந்தைய விலையில் ஒரு பீப்பாய்க்கு 35 டாலர்கள் வரை தள்ளுபடியில் முதன்மையான உரல்ஸ் தரத்திலான கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு ரஷ்யா விற்பனை செய்கிறது.
இந்தியா-ரஷ்யா பேச்சுவார்த்தையில் முக்கியமாக பண பரிவர்த்தனை தொடர்பாக பேசப்பட்டுள்ளது. டாலர் இல்லாமல் ரூபிள்- ரூபாய் மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்படும். அதாவது வர்த்தகத்தில் இந்தியா தரப்பில் ரூபாயிலும், ரஷ்யா தரப்பில் ரூபிளும் செலுத்தப்படும். இதனை ரஷ்யா ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது., உக்ரைன் படையெடுப்பைத் தொடர்ந்து சர்வதேச அழுத்தம் அதிகரித்து வருவதால் இந்தியாவிற்கு எண்ணெய் நேரடி விற்பனையில் அதிக தள்ளுபடியை வழங்க ரஷ்யா தயாராக உள்ளது. பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யா ஏற்றுமதியை உயர்த்துவதற்காகவும் இந்தியாவைக் கவர்ந்திழுக்கவும் போருக்கு முந்தைய விலையில் ஒரு பீப்பாய்க்கு 35 டாலர்கள் வரை தள்ளுபடியில் அந்நாட்டின் முதல் தரமான உரல்ஸ் கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு வழங்குகிறது.
ஹெட்லைன் ப்ரெண்ட் விலை அப்போதிருந்து சுமார் 10 டாலர்கள் உயர்ந்துள்ளன. எனவே இப்போதைய சந்தை விலையை ஒப்பிட்டால் மொத்தமாக 40 டாலர்கள் மதிப்பில் குறைவான விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கிடைக்க வாய்புள்ளது. அந்த ஒப்பந்தத்தில் கச்சா எண்ணெய் விலை தற்போதைய நிலையில் விற்கப்படும் விலையை மையப்படுத்தி தள்ளுபடி உறுதி செய்யப்பட்டாலும், விலை அதிகரிக்கும்போது இதில் மாற்றம் இருக்கலாம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த ஆண்டுக்கான ஒப்பந்தம் செய்யப்படுவதன்படி 15 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்க வேண்டும். ஆசியாவின் நம்பர் 2 கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா இதன் மூலம் பெருமளவு பயனடைய வாய்ப்புள்ளது. உக்ரைன் படையெடுப்பைத் தொடர்ந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு வாங்குபவதை தவிர்ப்பதால் ரஷ்யா ஆசியாவிற்கு அதிக அளவில் விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் ரஷ்யாவிடம் அதிகமான கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளாக சீனாவும், இந்தியாவும் உள்ளன.
ரஷ்யாவின் மெசேஜிங் சிஸ்டம் மூலம் ரூபாய்- ரூபிள் மதிப்பில் இந்த பரிவர்த்தனை நடைபெறுகிறது. டாலருக்கு மாற்றாக ரஷ்யாவுடன் இந்தியா இதுபோன்ற பரிவர்த்தனையில் ஈடுபடுகிறது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இரண்டு நாள் பயணமாக இந்தியா வரவுள்ள நிலையில் அப்போது இந்த பரிவர்த்தனை விஷயம் இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது. பிரைன்ட் கச்சா எண்ணெய் விலை நேற்று பீப்பாய் 103.3 டாலர்களாக உள்ளது. எம்சிஎல் கச்சா எண்ணெய் 99.14 டாலர் என்ற அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026 -
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2026சென்னை, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி
-
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Jan 2026- சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் தங்க கவசம் அணிந்து மாலை ஆளேறும் பல்லக்கில் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
13 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
13 Jan 2026


