முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகள் பட்டியல் வெளியீடு: ஐ.நா அறிக்கையில் தகவல்

திங்கட்கிழமை, 16 மே 2022      உலகம்
UN 2022 05 13

Source: provided

நியூயார்க் : வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகளில் பாகிஸ்தானையும் ஐ.நா. தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ளது.

உலக அளவில் வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகளின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை நேற்று வெளியிட்டது. வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகளில் பாகிஸ்தானையும் ஐ.நா அறிக்கையில் பட்டியலிட்டுள்ளது.

ஐ.நா-வின் பாலைவனமாதல், வறட்சி தினம் ஜூன் 17ல் கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒப்பந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் பாகிஸ்தான் உட்பட 23 நாடுகளில் வறட்சியால் அவசரநிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் - நாட்டின் 80 சதவிகிதம் வறண்ட அல்லது அரை வறண்ட நிலமாக உள்ளது. மோசமான நில மேலாண்மை நடைமுறைகள் மற்றும் இயற்கை வளங்களுக்கான அதிகரித்த தேவைக்காக  நிலத்தை  பாழ்படுத்துவது போன்ற காரணங்களால் பாலைவனமாக்கல் ஏற்படுகிறது. 

வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகள் பின்வருமாறு:-ஆப்கானிஸ்தான், அங்கோலா, பிரேசில், புர்கினா பாசோ, சிலி, எத்தியோப்பியா, ஈரான், ஈராக், கஜகஸ்தான், கென்யா, லெசோதோ, மாலி, மொரிட்டானியா, மடகாஸ்கர், மலாவி, மொசாம்பிக், நைஜர், சோமாலியா, தெற்கு சூடான், சிரியா, பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் சாம்பியா. 2050க்குள் கூடுதலாக 40 லட்சம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு புனரமைக்கப்பட வேண்டும்.வளரும் நாடுகளுக்கு உடனடியாக நிதி வழங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து