முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு: மருந்து வினியோகத்தில் ஈடுபட ராணுவத்துக்கு கிம் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 17 மே 2022      உலகம்
KIM 2022-05-17

Source: provided

பியாங்கியாங் : கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து வடகொரியாவில் மருந்து வினியோகத்தில் ஈடுபட அந்நாட்டு ராணுவத்துக்கு அதிபர் கிம் ஜாங் உத்தரவிட்டுள்ளார். 

உலகம் முழுவதும் கொரோனா பரவிய போதிலும், வடகொரியாவில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா நுழையாமல் இருந்தது. அங்கு எல்லைகள் மூடப்பட்டு, தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது.

ஒரு காரணமாக கருதப்படுகிறது.  இந்த சூழ்நிலையில்,கடந்த 12-ம் தேதி, தங்கள் நாட்டில் கொரோனா நுழைந்து விட்டதாக வடகொரியா வெளிப்படையாக அறிவித்தது. 

இந்நிலையில், தனதுகட்சியின் அரசியல் விவகாரகுழு கூட்டத்தில் கலந்து கொண்ட அதிபர் கிம் பேசியதாவது:- அரசு கையிருப்பில் உள்ள மருந்துகளை மருந்தகங்களுக்கு உடனடியாக அனுப்புமாறும், மருந்தகங்கள் 24மணி நேரமும் செயல்படவேண்டும் என்றும் அரசியல் விவகாரகுழு ஏற்கனவே உத்தரவுபிறப்பித்து இருந்தது. ஆனால் அந்த உத்தரவை சுகாதார அதிகாரிகள் பின்பற்றவில்லை. அவர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டனர்.

கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் திறம்பட ஈடுபடவில்லை. ஆகவே, எனது ராணுவத்தில் உள்ள மருந்துவ குழுக்கள், தலைநகர் பியாங்யாங்கில் மருந்துகள் வினியோகத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து