எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டோக்கியோ : இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறும், இந்தியாவில் முதலீடு செய்யக்கோரி ஜப்பான் தொழில் துறையினருடன் நேற்று பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் இணைந்து 'குவாட்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அமைதி, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இந்த நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படும் நோக்கத்தோடு இந்த குவாட் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்கிடையில், குவாட் நாடுகளின் 2 நாள் உச்சிமாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது.
இந்த மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். இந்நிலையில், குவாட் மாநாட்டிற்காக ஜப்பான் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி ஜப்பான் நாட்டு தொழில் துறையினரை நேற்று சந்தித்தார். ஜப்பான் நாட்டின் 30-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, இந்தியாவில் முதலீடு செய்ய வரும்படியும், இந்தியாவில் தொழில் தொடங்க வரும்படியும் ஜப்பான் தொழில் துறையினரிடம் இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
முன்னதாக குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு டோக்கியோவில் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், ஜப்பான் முன்னணி நாளிதழில் ஒன்றில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவும் ஜப்பானும் சுதந்திரமான இந்தோ-பசிபிக் பகுதியை உருவாக்க இணைந்து செயல்படுவதாக கூறியுள்ளார்.
பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பகுதிக்கு இரண்டு ஜனநாயக நாடுகளும் முக்கிய தூண்களாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சீனா, பல நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
தைவான், பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் உரிமை கோரினாலும், சீன அரசு சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் முழுவதையும் உரிமை கொண்டாடுகிறது, தென் சீனக் கடலில் செயற்கைத் தீவுகளையும் ராணுவ தளங்களையும் சீனா கட்டியுள்ளது, கிழக்கு சீனக் கடல் பகுதி தொடர்பாக ஜப்பானுடன் சீனா மோதலில் ஈடுபட்டுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
பின்னர் தமது டுவிட்டர் பதிவில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளதாவது., கொரோனாவுக்கு பிந்தைய உலகில் இந்தியா-ஜப்பான் இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பு இன்றியமையாதது. நமது நாடுகள் ஜனநாயக நம்பிக்கையில் உறுதியாக உள்ளன. பலதரப்பு துறைகளில் நாங்கள் நெருக்கமாக பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். குஜராத் முதல்வராக இருந்த நாட்களில் இருந்து ஜப்பானிய மக்களுடன் தொடர்ந்து உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
ஜப்பானின் வளர்ச்சி முன்னேற்றங்கள் எப்போதும் போற்றத்தக்கவை. உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், ஸ்டார்ட்-அப்கள் மற்றும் பல முக்கிய துறைகளில் ஜப்பான் இந்தியாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தி.மு.க. தேர்தல் வாக்குறுதி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
25 Jan 2026சென்னை, தி.மு.க.வால் இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட தி.மு.க.
-
இன்று 77-வது குடியரசு தினம்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் இன்று கொடியேற்றுகிறாா்
25 Jan 2026சென்னை, இன்று 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் இன்று கொடியேற்றுகிறாா்.
-
இன்று 77-வது குடியரசு தினம்: தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
25 Jan 2026புதுடெல்லி, நாடு முழுவதும் குடியரசு தினம் இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை உள்பட நாடு முழுவதும் உச
-
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து-நடராசனுக்கு சிலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை
25 Jan 2026சென்னை, மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு தாளமுத்து - நடராசன் நினைவிடத்தில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தின
-
டபுள் என்ஜின் எனக்கூறி ஏமாற்ற முடியாது: டெல்லியின் ஆதிக்கத்துக்கு தமிழ்நாடு தலைகுனியாது: காஞ்சிபுரத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை
25 Jan 2026காஞ்சிபுரம், டபுள் என்ஜின் எனக்கூறி இனி தமிழக மக்களை மத்திய அரசு ஏமாற்ற முடியாது என்றும் 7-வது முறையாக தமிழகத்தில் தி.மு.க.
-
வங்கதேசத்தில் பயங்கரம்: மேலும் ஒரு இந்து வாலிபர் உயிரோடு எரித்துக் கொலை
25 Jan 2026டாக்கா, வங்க தேசத்தில் மேலும் ஒரு இந்து வாலிபர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே இன்று தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
25 Jan 2026தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே 200 ஏக்கரில் மிக பிரமாண்டமாக "வெல்லும் தமிழ் பெண்கள்" என்ற தலைப்பில் தி.மு.க.
-
தமிழகத்தில் அன்றும், இன்றும், என்றும் இந்திக்கு இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
25 Jan 2026சென்னை, அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு தமிழகத்தில் இடமில்லை என்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழுக்காகத் தங
-
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக காவல்துறை அதிகாரிகள், பணியாளர்களுக்கு பதக்கங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
25 Jan 2026சென்னை, 2026-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வரின் மெச்சத்தக்க நுண்ணறிவுப் பதக்கம் மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பதக்கம்’ வழங்க மு.க.ஸ்டாலின் ஆ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –27-01-2026
26 Jan 2026


