முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணியில் மீண்டும் இடம்: நீங்கள் உங்களை நம்பினால் போதும் - தினேஷ் கார்த்திக்

திங்கட்கிழமை, 23 மே 2022      விளையாட்டு
Dinesh-Karthik 2022-05-23

நீங்கள் உங்களை நம்பினால் போதும் என்று தினேஷ் கார்த்திக் டுவீட் செய்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 287 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் இவரது ஸ்டிரைக் ரேட் 191.33-ஆக உள்ளது.

பாராட்டு...

இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தனது மோசமான ஆட்டத்தின் காரணமாக 2019 ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதனால் அவர் சமீபத்தில் போட்டி வர்ணணையாளராகவும் செயல்பட்டு வந்தார். இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்தி தனது சிறப்பான  ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது விளையாட்டுக்கு பல மூத்த வீரர்களும் பாராட்டு தெரிவித்து வந்தனர். 

ரசிகர்கள் வாழ்த்து... 

இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டி20 இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இதையடுத்து தான் இந்திய அணி உடையுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்ட தினேஷ் கார்த்திக்,  ‘உங்கள் ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் நன்றி. நீங்கள் உங்களையே நம்பினால் போதும். அனைத்தும் உங்களை தேடி வரும்’  என தெரிவித்துள்ளார். அவரது பதிவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 287 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் இவரது ஸ்டிரைக் ரேட் 191.33-ஆக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து