முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      தமிழகம்
Radhakrishnan 2022 05 24

Source: provided

சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

சென்னை ஐ.ஐ.டி.யில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த மாணவர்களால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பரவத் தொடங்கியது. இதையடுத்து, ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள விடுதிகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்தப் பரிசோதனை முடிவில் 198 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 40 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டது. அதில்தான் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு மருத்துவக் குழு அங்கு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா கண்டறியப்படும் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நோய்த் தொற்று பரவிய அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து