முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுக்குழுவுக்கு ஓ.பி.எஸ் தரப்பு எதிர்ப்பு: ஆதரவாளர்களுடன் இ.பி.எஸ். ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2022      அரசியல்
EPS-2022-06-24

பொதுக்குழுவுக்கு ஓ.பி.எஸ் எதிர்ப்பு தெரிவித்து தலைமை தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் ஆதரவாளர்களுடன் நேற்று இ.பி.எஸ். ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், வைகைச் செல்வன்,எஸ்.பி வேலுமணி, தங்கமணி, கேபி அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

அ.தி.மு.கவில் ஒற்றைத்தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. பெரும் பரபரப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் அ.தி.மு.க பொதுக்குழு கூடியது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த மாதம் 11 ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. ஜூலை 11 ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததற்கு எதிராக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது. 

இந்த மனுவில் ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் இன்றி அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு சட்ட விரோதமானது என்று எனவே, 11-ம் தேதி பொதுக்குழுவுக்கு அனுமதி அளிக்கக் கூடது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி நேற்று தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், வைகைச் செல்வன்,எஸ்.பி வேலுமணி, தங்கமணி, கேபி அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து