முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேப்டன் பொறுப்பு குறித்து நினைவுகளை பகிர்ந்த பும்ரா

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2022      விளையாட்டு
Bumra 2022 07 01

Source: provided

எட்ஜ்பாஸ்டன் : இந்திய அணியை தலைமை தாங்கி வழிநடத்துவதற்கு முன்னதாக வேறு எந்த அணிக்கும் தான் கேப்டனாக இருந்ததில்லை என டோனி தன்னிடம் சொன்னதாக இந்திய அணியின் கேப்டன் பும்ரா தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடைசி டெஸ்ட்...

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளும் நேற்று எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் பலப்பரீட்சை செய்தன. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்படுகிறார். இந்திய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது சமன் செய்தாலோ தொடரை வெல்லும்.

டோனியுடன்...

இந்நிலையில், முன்னாள் கேப்டன் டோனிக்கும், தனக்கும் இடையே நடந்த உரையாடல் ஒன்றை நினைவுகூர்ந்துள்ளார் பும்ரா. "அழுத்தங்கள் நிறைந்த தருணத்தில் கிடைக்கும் வெற்றியின் ருசி அருமையாக இருக்கும். எப்போதுமே பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருப்பவன். சவால் நிறைந்த சூழல்களை எதிர்கொள்ள விரும்புபவன். நான் பல்வேறு கிரிக்கெட் வீரர்களுடன் பேசியுள்ளேன். அனைவரும் தங்களை சிறப்பான வீரர்களாக மேம்படுத்திக் கொண்டதையும் பார்க்கிறேன்.

தலைசிறந்த கேப்டன்...

இந்த நேரத்தில் எனக்கு முன்னாள் இந்திய கேப்டன் டோனி உடன் நடந்த உரையாடல்தான் நியாபகம் வருகிறது. இந்திய அணிக்கு முன்னதாக வேறு எந்த அணிக்கும் தான் கேப்டனாக இருந்ததில்லை என டோனி என்னிடம் சொன்னார். இப்போது அவர் தலைசிறந்த கேப்டனாக அறியப்படுகிறார். அதனால் என்னால் அணிக்கு எந்த வகையில் உதவ முடியும் என்பது குறித்து மட்டுமே நான் கவனம் செலுத்தி வருகிறேன். வேறு எதிலும் நான் கவனம் செலுத்தவில்லை. இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பை எனக்கு கிடைத்த கவுரமாக பார்க்கிறேன்" என பும்ரா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து