எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் இசையார்ந்த நாட்டிய நாடகத்தை சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று மாலை 6.00 மணியளவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் செல்லமுத்து சேதுபதி, முத்தாத்தாள் தம்பதியருக்கு 1730-ம் ஆண்டு வீரமங்கை வேலுநாச்சியார் மகளாகப் பிறந்தார். சிறு வயதிலேயே அனைத்துப் போர்ப் பயிற்சிகளையும் கற்றுத் தேர்ந்தார். வீரம் என்ற மூன்றெழுத்தை தன் மூச்சாகக் கொண்டு, பயம் என்கிற சொல்லை அறியாதவராகத் திகழ்ந்தார். 1772-ம் ஆண்டு ஆங்கிலேயப் படையெடுப்பால் கணவரை இழந்த இவருக்கு நாட்டை மீட்டெடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு இருந்தது.
மருது சகோதரர்கள் ஆதரவுடனும், ஹைதர் அலி, கோபால் நாயக்கர் ஆகியோரின் உதவியுடன் சிவகங்கை மக்களை ஒன்று திரட்டி, வலுவான ஓர் எதிர்ப்புப் படையினை உருவாக்கி, ஏழு ஆண்டுகள் இடைவிடாமல் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டு மாபெரும் வெற்றிப் பெற்று சிவகங்கை சீமையை மீட்டெடுத்தார். இதனைத் தொடர்ந்து 1789-ம் ஆண்டு வரை சிவகங்கையை ஆட்சி செய்தார்.
வடஇந்திய ஜான்சி ராணிக்கு 75 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய முதல் வீரப் பெண்மணி வேலுநாச்சியார் ஆவார். வீரமங்கை வேலுநாச்சியார் தமது போர்ப்படைப் பிரிவில் பெண்களுக்கென்று தனிப்படை உருவாக்கி பல போர்களை எதிர்கொண்டார். வேலுநாச்சியார் போர்ப்படை தளபதி ‘குயிலி’ ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் தன் இன்னுயிரையே ஆயுதமாக ஏந்தினார்.
இந்திய விடுதலை வரலாற்றில் வீரம் நிறைந்த வீரமங்கை வேலுநாச்சியாருக்கு ஈடாக எவரும் இல்லை. சிவகங்கை சீமையை ஆண்ட வீரமங்கை வேலுநாச்சியார் 25.12.1896 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். வீரத்திருமகளைப் போற்றுகின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் சிவகங்கை மாவட்டம், சூரக்குளத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
வீரமங்கை வேலுநாச்சியார் என்ற ‘வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் நாட்டிய நாடகத்தை கலைப்பண்பாட்டுத் துறை மூலம் ஓ.வி.எம்.தியேட்டர்ஸ் நிறுவனம் இணைந்து 62 நாடக கலைஞர்கள் பங்கேற்கும் இசையார்ந்த நாட்டிய நாடக நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்.
இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் 15.08.2022 அன்று சி.என்.சி.கல்லூரியிலும், மதுரை மாவட்டத்தில் 21.08.2022 அன்று இராஜா முத்தையா மன்றம் அரங்கிலும், திருச்சி மாவட்டத்தில் 22.08.2022 அன்று கலையரங்கத்திலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 28.08.2022 அன்று இந்துஸ்தான் கல்லூரி அரங்கத்திலும் வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடக நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகத்தை அனைவரும் கண்டுகளிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இதற்கான அனுமதி இலவசம்.
தமிழக அரசின் சார்பில் நடைபெறும் வீரமங்கை வேலுநாச்சியாரின் இசையார்ந்த நாட்டிய நாடக நிகழ்ச்சிகளில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. - முதல்வர்
13 Sep 2025சென்னை : மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வரும் 20-ம் தேதி நடைபெற இருந்த நாகையில் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு
13 Sep 2025நாகை, நாகை மாவட்டம் அவுரித்திடலில் வரும் 20-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜயின் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
-
தங்கம் விலை சற்று சரிவு
13 Sep 2025சென்னை : உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வர
-
திண்டுக்கல் அருகே மின் கசிவு காரணமாக பஞ்சு ஆலையில் திடீர் தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசம்
13 Sep 2025திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார்நத்தம் பகுதியில் தனியார் பஞ்சு ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது.
-
வரும் 22-ம் தேதி முதல் அமலாகும் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் விலை உயரும் பொருட்கள் எவை? வெளியான புதிய தகவல்கள்
13 Sep 2025புதுடெல்லி. வரும் 22-ம் தேதி முதல் அமலாகும் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் விலை உயரும் பொருட்கள் எவை என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
7.4 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
13 Sep 2025மாஸ்கோ : 7.4 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக சனிக்கிழமை காலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன்: பிரதமர் மோடி
13 Sep 2025இம்பால், மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இன்பதுரை எம்.பி. நியமனம்
13 Sep 2025சென்னை : மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இன்பதுரை எம்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்க்கும் குடிமக்களுக்கு மரண தண்டனை விதிப்பு? ஐ.நா. அறிக்கைக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு
13 Sep 2025பியாங்யாங், வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்த்தால் குடிமக்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக ஐ.நா.
-
பிரதமருக்கு மணிப்பூர் நினைவு வந்துள்ளது: கனிமொழி எம்.பி.
13 Sep 2025மணிப்பூர் : தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவு வந்துள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக்: ஓமனை வீழ்த்தியது பாகிஸ்தான் 67 ரன்களுக்கு சுருட்டி வெற்றி
13 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி ஓமனை 67 ரன்களுக்கு சுருட்டி வெற்றி எளிதில் வெற்றிப்பெற்றது.
-
மத்திய அரசு திட்டங்களுக்கு நேரடி நிதி; ரிசர்வ் வங்கியில் கணக்கு துவக்கிய தமிழ்நாடு அரசு
13 Sep 2025சென்னை : மத்திய அரசின் உதவியுடன், மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களுக்கான செலவு தொகையை, நேரடியாக வழங்கும் பணி துவங்கி உள்ளது.
-
கர்நாடகாவில் விநாயகா் சிலை ஊா்வல விபத்தில் 9 போ் பலி : பிரதமர் மோடி இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு
13 Sep 2025புதுதில்லி : கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சனி
-
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு
13 Sep 2025சென்னை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
மிசோரத்தில் ரூ. 8,070 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பைராபி-சாய்ராங் புதிய ரயில் பாதை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
13 Sep 2025ஐஸ்வால் : மிசோரமில் பைராபி - சாய்ராங் புதிய ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
-
நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5-ம் தேதிக்குள் தேர்தல் : இடைக்கால அரசு அறிவிப்பு
13 Sep 2025காத்மாண்டு : வன்முறை வெறியாட்டத்தில் சிக்கி தவித்த நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
-
பாக்.கிற்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ-க்கு கடும் எதிர்ப்பு
13 Sep 2025துபாய் : பாக்.கிற்கு எதிரான போட்டியில் இன்று இந்திய அணி விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ.,க்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
பழநி கோவிலுக்கான ரூ.100 கோடி நிலம் மீட்பு
13 Sep 2025பழநி, பழநி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.
-
2வது டி-20-யில் அபார வெற்றி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இங்கிலாந்து
13 Sep 2025மான்செஸ்டர் : 2-வது டி-20 போட்டியில் ஜோஸ் பட்லர் மற்றும் பிலிப் சால்ட்டின் அபார பேட்டிங்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது.
-
பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு: ஐ.நா. தீர்மானத்துக்கு 142 நாடுகள் ஆதரவு : அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்ப்பு
13 Sep 2025நியூயார்க் : பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு ஏற்படுத்த கோரும் ஐ.நா. தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்தன.
-
காங்கோவில் பயங்கரம்: 2 படகு விபத்துகளில் 193 பேர் பலி
13 Sep 2025கின்சாஹா : காங்கோவில் நிகழ்ந்த 2 படகு விபத்துகளில் 193 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இங்கிலாந்தில் இந்திய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி
13 Sep 2025லண்டன் : இங்கிலாந்தில் இந்திய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமையால் அதிர்ச்சி சம்பவம் நிளவியுள்ளது.
-
சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் : பக்தர்களுக்கு ஆர்.ஆர்.கோபால்ஜி அழைப்பு
13 Sep 2025சென்னை : சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நடப்பதையொட்டி வருகிற 22-ம் தேதி பக்தர்களுக்கு ஆர்.ஆர். கோபால்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
-
சாம்சனுக்கு பயிற்சியாளர் ஆதரவு
13 Sep 2025சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் சொதப்புவார் என்று அர்த்தமில்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டக் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி பிரச்சாரத்தில் வேலை செய்யாத மைக்: விஜய் பேச்சை கேட்க வந்த தொண்டர்கள் ஏமாற்றம்
13 Sep 2025திருச்சி : விஜய் பேசியபோது திடீர் என்று தொழில்நுட்ப கோளாறால் மைக்கில் வேலை செய்யவில்லை இதனால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.