முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்பந்து கூட்டமைப்பு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
Supreme-Court 2022-08-16

Source: provided

புதுடெல்லி : இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு நேற்று தற்காலிகமாக ரத்து செய்த நிலையில், கால்பந்து கூட்டமைப்பு விவகாரம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

3 நகரங்களில்... 

17 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது. வரும் அக்டோபர் மாதம் 11 முதல் 30-ம் தேதி வரை இப்போட்டிகள் மும்பை, கோவா, புவனேஷ்வர் ஆகிய 3 நகரங்களில் நடைபெறுவதாக இருந்தது.

தற்காலிக ரத்து... 

ஆனால், பெண்கள் உலகக்கோப்பை போட்டியை இந்தியா நடத்தும் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ததுடன், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தையும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா இன்று தற்காலிகமாக ரத்து செய்தது. பிபா-வின் இந்த நடவடிக்கை இந்திய கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கண்காணிப்பு...

இந்திய கால்பந்து கூட்டமைப்பு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது. சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட கமிட்டி இந்த தேர்தல் மற்றும் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகத்தை கவனித்து வருகிறது.

மத்திய அரசு கோரிக்கை...

இதனிடையே, 3-ம் நபரின் தலையீடு உள்ளதாக கூறி இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தையும், 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பையை இந்தியாவில் நடத்துவதற்கான உரிமத்தையும் சர்வதேச கால்பந்து கவுன்சில் தற்காலிகமாக ரத்து செய்தது. இந்நிலையில், இந்திய கால்பந்து கூட்டமைப்பு தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்குமாறு மத்திய அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இன்று தீர்ப்பு...

மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, இந்த விவகாரத்தை வழக்கை விசாரிக்கும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் போபன்னா பார்வைக்கு நேற்று கொண்டுவந்தார். இதை ஏற்ற நீதிபதிகள், இந்திய கால்பந்து கூட்டமைப்பு தொடர்பான வழக்கு ஏற்கனவே இன்று (ஆக.17) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், இன்று இந்த வழக்கு விசாரிக்கபடும் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் இன்று அதிரடி தீர்ப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து