எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நியூசிலாந்து ஏ அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் ஆட்டங்களிலும் 3 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் நேற்று முதல் தொடங்கியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து ஏ அணி 40.2 ஓவர்களில் 167 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மைக்கேல் ரிப்பன் அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்தார். ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டுகளும் குல்தீப் சென் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.
இந்திய ஏ அணி சிறப்பாக பேட்டிங் செய்து 31.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ருதுராஜ் 41, திரிபாதி 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள். சஞ்சு சாம்சன் 29, ரஜத் படிதார் 45 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
____________
அணியில் இந்திரஜித்திற்கு
வாய்ப்பு: தினேஷ் கார்த்திக்
கோயம்புத்தூரில் துலீப் கோப்பை இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் தெற்கு மண்டல அணியில் இடம்பெற்றுள்ள சாய் கிஷோர், பாபா இந்திரஜித் ஆகிய இரு தமிழக வீரர்களும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேற்கு மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 270 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் பேட்டர் ஹெட் படேல் 98 ரன்கள் எடுத்தார். சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தெற்கு மண்டல அணி, 63 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
பாபா இந்திரஜித் சிறப்பாக விளையாடி சதமடித்தார். ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாடிய 3 ஆட்டங்களில் 3 சதங்கள், ஒரு அரை சதமெடுத்த இந்திரஜித் (3 ஆட்டங்களில் 396 ரன்கள், சராசரி - 99.00), துலீப் கோப்பை இறுதி ஆட்டத்திலும் சதமடித்து அசத்தியுள்ளார். இதையடுத்து இந்திய அணியில் பாபா இந்திரஜித் விரைவில் தேர்வாக வாய்ப்புண்டு என தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். தீவிரமான துலீப் கோப்பை இறுதி ஆட்டத்தில் அபாரமான வீரரிடமிருந்து தரமான சதம். இதுவரை முதல் தர கிரிக்கெட்டில் என்னவொரு சாதனை. இந்திய அணியில் விரைவில் வாய்ப்பு கிடைக்கலாம். நன்றாக விளையாடினீர்கள் பாபா இந்திரஜித் என்று கூறியுள்ளார்.
______________
பாக்., ஜெர்சியை கிண்டல்
செய்த டானிஷ் கனேரியா
டி20 உலகக்கோப்பையில் விளையாட உள்ள உலக அணிகள் போட்டியில் தாங்கள் அணிய உள்ள புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துவருகின்றன. இந்த சூழலில் பாகிஸ்தான் அணியும் தங்களின் புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜெர்சி தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் ஜெர்சியைப் பார்க்கும்போது பழக்கடையில் நிற்பதைப் போன்ற உணர்வு ஏற்படுவதாகவும், வழக்கமான அடர் பச்சை வண்ணத்தில் ஜெர்சியை வடிவமைத்து இருக்க வேண்டும் என்றும் அந்நாட்டு முன்னாள் வீரரான கனேரியா கருத்து தெரிவித்து உள்ளார்.
_____________
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின்
பொறுப்பு தலைவர் ராஜினாமா
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொறுப்புத் தலைவர் பதவியை அனில் கன்னா ராஜினாமா செய்து உள்ளார். நரீந்தர் பத்ராவின் விலகலுக்குப் பிறகு இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால பொறுப்புத் தலைவராக அனில் கன்னா பொறுப்பேற்றார்.
ஆனால் இடைக்கால தலைவர் பதவியை அங்கீகரிக்க இயலாது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூறியது. இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அறிவுறுத்தல்களை மதித்து, பொறுப்புத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அனில் கன்னா கூறி உள்ளார்.
_____________
அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை:
தென்ஆப்பிரிக்கா கேப்டன் ஆதங்கம்
டி20 லீக் போட்டிக்கான ஏலத்தில் தான் தேர்வு செய்யப்படாதது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் தென்னாப்பிரிக்க அணியின் வெள்ளைப் பந்து கேப்டன் டெம்பா பவுமா. 2023 ஜனவரி மாதம் ஆறு அணிகள் பங்கேற்கும் புதிய டி20 லீக் போட்டியை சூப்பர் ஸ்போர்ட் நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது.. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தென்னாப்பிரிக்க கேப்டனாகச் செயல்படவுள்ள டெம்பா பவுமாவை வீரர்களின் ஏலத்தில் எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. அதேபோல தெ.ஆ. டெஸ்ட் கேப்டன் டீன் எல்கரையும் எந்த அணியும் தேர்வு செய்யவில்லை.
இந்தியாவில் வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடுவதற்காக இந்தியாவுக்குப் புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் பவுமா. அப்போது அவர் கூறியதாவது: எஸ்ஏ20 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் எந்த அணியும் என்னைத் தேர்வு செய்யாதது குறித்து எனக்கு வருத்தம் இல்லை என்று சொன்னால் பொய் சொலவதாக ஆகிவிடும். அந்தப் போட்டியில் பங்கேற்கத் தயாராக இருந்தேன். எனக்கு வருத்தமாகத்தான் உள்ளது. ஏமாற்றப்பட்டு விட்டதாகவே உணர்கிறேன். அதற்காக (போட்டியில் பங்கேற்பதற்கான) உரிமை உள்ளதாக நான் எண்ணவில்லை. அதேசமயம் இதில் அதிகக் கவனம் செலுத்த விரும்பவில்லை. இது சரியான நேரமில்லை என்றார்.
________________
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தங்கம், வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சம்..! கடந்த 4 நாட்களில் ரூ.3,360 அதிகரிப்பு
25 Dec 2025சென்னை, தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ. 160 உயர்ந்து ரூ. 1,02,560 -க்கு விற்பனையாகு புதிய உச்சம் தொட்டுள்ளது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.
-
உலகம் அழிவதை தற்போது கடவுள் தள்ளிப்போட்டுள்ளார்: கானா நாட்டு தீர்க்கத்தரிசி அந்தர்பல்டி
25 Dec 2025அக்ரா, நம்மில் பலருக்கு உலகம் அழியப்போகிறது என்ற வார்த்தை 2004-ம் ஆண்டு முதல் கேட்டுக்கொண்டு வருகிறோம்.
-
வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்: போப் 14-ம் லியோ உரை
25 Dec 2025வாடிகன், வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது, போப் 14-ம் லியோ முதல் திருப்பலியில் உரையாற்றினார்.
-
அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்கும் முறையில் மாற்றம்
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்குவதற்கான குலுக்கல் முறையை ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
-
ஓ.பி.எஸ்.சும், தினகரனும் தே.ஜ. கூட்டணியில் இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி
25 Dec 2025கிருஷ்ணகிரி, ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் எங்கள் கூட்டணி யில் இல்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய தனித்துறை (ஐஸ்) உருவாக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது செ
-
டெல்லியில் இருந்தபோது சுவாச தொற்று ஏற்பட்டது: மத்திய அமைச்சர் வருத்தம்
25 Dec 2025புதுடெல்லி, டெல்லி இருந்தபோது காற்று மாசு காரணமாக சுவாச தொற்று ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
101-வது பிறந்தநாள்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி
25 Dec 2025புதுடெல்லி, வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள 'சதைவ் அடல்' நினைவிடத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.
-
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை
25 Dec 2025சென்னை, அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளிலேயே 3-ம் பருவத்துக்கான பாடப்புத்தகம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
25 Dec 2025சென்னை, இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்நடத்திய வன்முறையாளர்களை சம்பவம் நடைபெற்ற மாநிலங்களின் அரசுகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று வைகோ தெரிவி
-
பொருளாதாரத்தில் இந்தியா மிக விரைவில் முதல் இடம் பிடிக்கும்: மத்திய இணை அமைச்சர் நம்பிக்கை
25 Dec 2025கோவை, பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் முதல் இடம் பிடிக்கும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
-
சிறுபான்மையினர் மீது தாக்குதல் எதிரொலி: கலவர கும்பலை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
25 Dec 2025சென்னை, சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தி நாட்டுமக்களைப் பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கும் கலவர கும்பலை இரும்புக்கரம்
-
ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்த ஜெலன்ஸ்கி
25 Dec 2025கீவ், ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-12-2025.
25 Dec 2025 -
வேலு நாச்சியார் நினைவு நாள்: த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
25 Dec 2025சென்னை, வேலு நாச்சியார் நினைவு நாளை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
-
2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்கிறார்
25 Dec 2025சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் ரூ.1,045 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 லட்சத்து 16 ஆயிரத்த
-
காற்று சுத்திகரிப்பானுக்கு அதிக ஜி.எஸ்.டி. வரி விதிக்கலாமா...? டெல்லி உயர் நீதிமன்றம் காட்டம்
25 Dec 2025புதுடெல்லி, ஒவ்வொரு குடிமகனுக்கும் சுத்தமான காற்று தேவை. அதற்கான குறைந்தபட்ச நடவடிக்கையாக அரசு காற்று சுத்திகரிப்பான்களை வழங்கலாம் என்று டெல்லி ஐகோர்ட் கூறியது.
-
இந்தியா வணிக வர்த்தகத்தில் சுமார் 10.73 சதவீதம் அமெரிக்காவை சார்ந்தது: அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தகவல்
25 Dec 2025வாஷிங்டன், இந்தியா வணிக வர்த்தகத்தில் 10.73 சதவீதம் அமெரிக்காவை சார்ந்தது என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தெரிவித்தார்.
-
த.வெ.க. தலைவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2025சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. ஆட்சிக்கு இப்போதும் கூடுதல் வரவேற்பு கிடைக்கிறது: அமைச்சர் முத்துசாமி தகவல்
25 Dec 2025ஈரோடு, தி.மு.க.
-
தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
25 Dec 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவ
-
தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் கோலாகம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
25 Dec 2025சென்னை, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
-
திட்டக்குடி கோர விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
25 Dec 2025சென்னை, திட்டக்குடி கோர விபத்து குறித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பனிமூட்டம் காரணமாக மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கம்
25 Dec 2025சென்னை, பனிமூட்டம் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு வரும் ரயில்கள் சற்று தாமதமாக வருகை தருகின்றன.;
-
உ.பியில் ரூ.230 கோடியில் தேசிய நினைவிடம் - அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
25 Dec 2025புதுடெல்லி, உ.பியில் ரூ.230 கோடியில் தேசிய நினைவிடம் - அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.


