முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மற்ற நாணயங்களை ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் மதிப்பு சீராக உள்ளது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      இந்தியா
Nirmala-Seetharaman 2022-09-25

Source: provided

புது டெல்லி: மற்ற நாணயங்களை ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு சீராகவே உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதேவேளையில் ரிசர்வ் வங்கியும் மத்திய நிதி அமைச்சகமும் நிலைமையை தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, 

அமெரிக்க டாலர் மதிப்பு சரிவை ஒட்டி உலக நாணயங்களில் ஏதேனும் ஒன்று ஏற்றத்தாழ்வு மற்றும் நிலையற்றத்தன்மையை தாக்குப்பிடித்து சீராக இருக்கிறது என்றால் அது இந்திய நாணயம் தான். அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த வெள்ளிக்கிழமை அன்று வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், சரிவைக் கண்டது. ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 90 காசுகள் குறைந்து, 80.86 ரூபாயாக சரிந்தது. அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி உயர்வு அறிவிப்பை அடுத்து, ரூபாயின் மதிப்பு கடுமையான சரிவைக் கண்டது.

இதற்கிடையில் ரஷ்யா உக்ரைனுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டது. 3.5 லட்சம் வீரர்களை களமிறக்கப் போவதாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த அறிவிப்பு அமெரிக்க பங்குச் சந்தையையும், செலாவணி சந்தையை ஆட்டம் காணச் செய்துள்ளது. இதனால் உலகளவில் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆசிய சந்தைகளில் பல நாடுகளின் நாணயங்களின் மதிப்பும் பெரும் சரிவைக் கண்டுள்ளது. இந்நிலையில் மற்ற நாணயங்களை ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் மதிப்பு சீராகவே உள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து