முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அடையாறு மணிமண்டபத்தில் இன்று நடிகர் சிவாஜி கணேசனின் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலையணிவித்து மரியாதை

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2022      தமிழகம்
Stelin 2022 03 05

Source: provided

சென்னை : சென்னை அடையாறு மணிமண்டபத்தின் உட்பகுதியில் பொதுமக்கள் வெளியில் இருந்து பார்க்கும் வகையில் இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசனின் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாலையணிவித்து மரியாதை செலுத்துகிறார். 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தி.மு.க. ஆட்சியின் போது கடந்த 2006-ம் ஆண்டு மெரினா கடற்கரையில் ஆள் உயர வெண்கல சிலை நிறுவப்பட்டது. காமராஜர் சாலை - ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் காந்தி சிலை அமைந்துள்ள பகுதியில் சாலையின் நடுவே இந்த சிலை அமைக்கப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மெரினா கடற்கரை பகுதியில் இருந்து சிவாஜி சிலை அகற்றப்பட்டது. 

அதை தொடர்ந்து அப்போதிருந்த அ.தி.மு.க. அரசு சிவாஜி கணேசனுக்கு அடையாறில் மணிமண்டபம் கட்டியது. இந்த மணிமண்டபத்தில் சிவாஜி கணேசனுக்கு வெண்கல சிலை நிறுவப்பட்டது. மேலும் மணிமண்டபத்தில் சிவாஜியின் அரிய புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. மணிமண்டபத்தின் நடுவே சிலையை அமைத்திருந்தனர். வெளியில் இருந்து பார்த்தால் தெரியாத வகையில் சிலை இருந்தது. 

இந்த நிலையில் பொதுமக்கள் வெளியில் இருந்தே பார்க்கும் வகையில் மண்டபத்தின் உள்பகுதியிலேயே சாலையை பார்க்கும் வகையில் சிவாஜியின் கம்பீரமான சிலை இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா சிவாஜி பிறந்த நாளான இன்று (அக்டோபர் 1-ம் தேதி) நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து