எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மும்பை : அரசு ஊழியர்கள் இனி 'ஹலோவிற்கு' பதிலாக' வந்தே மாதரம்' சொல்ல வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவா சேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், பா.ஜ.க கூட்டணி அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களுக்கு வரும் செல்போன் அழைப்புகளுக்கு, `ஹலோ' என்று கூறாமல் `வந்தே மாதரம்' என்று கூறவேண்டும் என அரசு உத்தரவிட்டிருக்கிறது.
இதற்கான அரசின் தீர்மானத்தை மாநில பொது நிர்வாகத் துறை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று முதல் மாநிலத்தில் அமலுக்கு வந்தது. இதற்கான அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் மாதமே, மகாராஷ்டிரா கலாசார துறை மந்திரி சுதிர் முங்கந்திவார் வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ள தீர்மானத்தில், 'ஹலோ' என்று கூறாமல் `வந்தே மாதரம்' என்று கூறவேண்டும் என்பது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அந்தந்த அரசு துறைகளின் மேல் அதிகாரிகள் தங்கள் ஊழியர்களை அவ்வாறு பேச ஊக்குவிக்க வேண்டும் என்று என கூறப்பட்டுள்ளது. 'ஹலோ' என்பது மேற்கத்திய கலாச்சாரத்தை சித்தரிப்பதாகவும், அந்த வார்த்தைக்கு குறிப்பிட்ட அர்த்தம் எதுவும் இல்லை என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"வந்தே மாதரம்" என்று கூறி மக்களை வாழ்த்துவது பாச உணர்வை உருவாக்கும் என்வும் அதை ஊக்குவிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025