முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை: ராஜஸ்தான் மாநிலத்தில் ரொக்கம், தங்கம் பறிமுதல்

புதன்கிழமை, 5 அக்டோபர் 2022      இந்தியா
CPI 2022--10-05

Source: provided

புதுடெல்லி : நாடு முழுவதும் சி.பி.ஐ. நடத்திய சோதனையில் ராஜஸ்தானில் இருந்து மட்டும் ரூ.1.5 கோடி ரொக்கம், 1.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் இணைய வழியிலான சைபர் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிரித்து வருகிறது. இணைய வழியில் பண மோசடி, தகவல் திருட்டு உள்பட பல குற்றங்களால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், "ஆபரேஷன் சக்ரா" என சி.பி.ஐ. நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போல் மற்றும் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான எப்.பி.ஐ. கொடுத்த ரகசிய தகவல்கள் அடிப்படையில் சைபர் குற்றங்கள் தொடர்பாக நாட்டின் 105 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், 300-க்கும் மேற்பட்ட நபர்களை கண்காணித்து வருவதாகவும், ராஜஸ்தானில் ஒரு இடத்தில் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் மற்றும் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து