முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

38 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் உலகின் மிக பெரிய எரிமலை வெடித்தது : 2 லட்சம் மக்களுக்கு எச்சரிக்கை

புதன்கிழமை, 30 நவம்பர் 2022      உலகம்
America 2022-11-30

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய எரிமலை 38 ஆண்டுகளுக்கு பின்பு வெடித்தது. இதன் காரணமாக 2 லட்சம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் மேற்கே பசிபிக் பெருங்கடலையொட்டி அமைந்துள்ள ஹவாய் தீவில் மவுனா லோவா என்கிற எரிமலை உள்ளது. இது உலகின் மிகப்பெரிய எரிமலை ஆகும். 38 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த எரிமைலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. பெரிய அளவிலான நிலநடுக்கங்களை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு எரிமலை வெடிப்பு தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வெடிப்பை தொடர்ந்து எரிமலையில் இருந்து நெருப்பு குழம்பு வெளியேறி வருகிறது. எனினும் அது தற்போது எரிமலை வாயின் விளிம்புகளுக்கு உள்ளாக முடிந்திருக்கின்றன என்றும், எனவே அது குறித்து அச்சுறுத்தல் தற்போதைக்கு இல்லை என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

எரிமலைக் குழம்பு குடியிருப்பு பகுதிகளை நோக்கி செல்ல தொடங்கினால் அங்கிருந்து வெளியேற தயாராக இருக்குமாறு தீவில் வசிக்கும் சுமார் 2 லட்சம் மக்களை அறிவுறுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து