முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நலத்திட்ட உதவி வழங்கும் விழா: வரும் 5-ம் தேதி அமைச்சர் உதயநிதி மதுரை வருகை

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023      தமிழகம்
Udhayanidhi 20221 02 02

Source: provided

மதுரை: மதுரையில் வரும் 6-ம் தேதி தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 5-ம் தேதி மதுரை வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் முடிவு செய்துள்ளனர். 

இது குறித்து மதுரை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ., மணிமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

மதுரையில் வருகிற 6-ம் தேதி தி.மு.க. சார்பில் பாண்டி கோவில் ரிங் ரோட்டில் உள்ள கலைஞர் திடலில் ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். 

இந்த விழாவுக்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 5-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு விமானம் மூலம் மதுரை வருகிறார். அவருக்கு மதுரை வடக்கு, மாநகர், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. 

எனவே இதில் இந்நாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளு மன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகி கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து