எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ. பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுகிறார். இரட்டை இலை சின்னம் எந்த வகையிலும் முடங்கி விடக்கூடாது என்பது தான் எங்கள் நோக்கம் இரட்டை இலை வெற்றி பெற வாக்குகள் கேட்போம் என கு.ப. கிருஷ்ணன் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். தே.மு.தி.க., நாம் தமிழர், அ.ம.மு.க. ஆகியவையும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. நடிகர் கமலஹாசனின் ம.நீ.ம. கட்சி காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக தம்மை அங்கீகரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து நடந்த விசாரணையை அடுத்து சுப்ரீம் கோர்ட் ஓ. பன்னீர் செல்வம் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒருங்கிணைந்த ஒரு வேட்பாளரை அ.தி.மு.க. அவைத் தலைவர் பரிந்துரைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து தென்னரசுவை வேட்பாளர் என குறிப்பிட்டு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கையெழுத்து பெறப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்களின் அந்த ஆதரவு கையெழுத்துடன் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம் அதனை ஒப்படைத்தார்.
இந்நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர் செல்வம் தரப்பை சேர்ந்த மூத்த தலைவர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் ஆகியோர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற வேண்டும். அதற்காக வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெறுகிறோம் என அறிவித்தனர்.
இது குறித்து முன்னாள் அமைச்சரும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளருமான கு.ப.கிருஷ்ணன் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ. பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுகிறார். இரட்டை இலை சின்னம் எந்த வகையிலும் முடங்கி விடக்கூடாது என்பது தான் எங்கள் நோக்கம் இரட்டை இலை வெற்றி பெற வாக்குகள் கேட்போம். தென்னரசுக்காக அல்ல என கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
சாம்சனுக்கு பயிற்சியாளர் ஆதரவு
13 Sep 2025சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் சொதப்புவார் என்று அர்த்தமில்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டக் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் : எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
13 Sep 2025சிங்காநல்லூர் : கோவையில் மெட்ரோ ரயில் பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது, ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஏதேதோ பிரச்னை சொல்லி முடக்கிவைத்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025