முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்இணைப்புடன் ஆதாரை இணைக்காவிட்டால் மின் கட்டணத்தை பிப்.15-க்கு பிறகு செலுத்த முடியாது

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2023      தமிழகம்
Aadhaar 2022-12-25

Source: provided

சென்னை : மின்இணைப்புடன் ஆதார் எண் இணைக்காவிட்டால் வரும் 15-ம் தேதிக்கு பிறகு மின் கட்டணம் செலுத்த இயலாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. 100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த அக்டோபர் 6-ந்தேதியே மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

இதற்காக தமிழ்நாடு முழுவதும் 2,811 மின்சார வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டு பொதுமக்களுக்கு ஆதார் எண்களை இணைத்து கொடுத்து வருகின்றனர். சுமார் 3 கோடி மின் இணைப்பு உள்ள நிலையில் வீடுகளுக்கான மின் இணைப்புகள் மட்டும் 2 கோடியே 33 லட்சம் மின் இணைப்புகள் இருக்கிறது. இது தவிர 10 லட்சம் குடிசை மின் இணைப்புகள், 23 லட்சம் விவசாய மின் இணைப்புகள் 1 லட்சத்து 60 ஆயிரம் விசைத்தறி மின் இணைப்புகள் உள்ளது.

இந்த 4 வகையான மின் இணைப்புகளில் வீட்டு உபயோக மின் இணைப்புக்கும், விசைத்தறி மின் இணைப்புக்கும் 100 யூனிட் மின்சாரம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. டிசம்பர் 31-ம் தேதி வரை ஆதாரை இணைக்க ஏற்கனவே காலக்கெடு விதித்திருந்த நிலையில் 65 சதவீதம் பேர் தான் அந்த சமயத்தில் ஆதாரை இணைத்திருந்தனர். இதனால் ஜனவரி 31-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. அப்படி இருந்தும் 2 கோடியே 47 லட்சம் மின் இணைப்புகள் மட்டுமே ஆதாருடன் இணைக்கப்பட்டு இருந்ததால் வருகிற 15-ந்தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்களுக்கு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் பலனாக நேற்று வரை 2 கோடியே 64 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது. வருகிற 15-ந்தேதி வரை காலக்கெடு உள்ளதால் அதற்குள் ஆதார் எண்ணை இணைக்குமாறு விடுபட்டவர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டு வருகிறது.

இதுபற்றி அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், 3 கட்டமாக கால நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளதால் ஒரு சிலரை தவிர பெரும்பாலானோர் ஆதார் எண்ணை இணைத்து விட்டனர். இன்னும் 15-ந்தேதி வரை அவகாசம் உள்ளதால் அனைவரும் இணைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே இனிமேல் கால அவகாசம் வழங்கப்படாது என்று தெரிவித்தார். ஆதாரை இணைக்காவிட்டால் 15-ந்தேதிக்கு பிறகு மின் கட்டணம் செலுத்த இயலாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆதாரை இணைக்காதவர்களின் வீடுகளை கண்டறிந்து மின்வாரிய ஊழியர்கள் நேரில் சென்றும் நினைவுப்படுத்தி ஆதார் எண்ணை இணைக்குமாறு அறிவுறுத்தும் பணிகளும் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து