எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - காவஸ்கர் கிரிக்கெட் தொடர், டெஸ்ட் ஆட்டத்துடன் வியாழக்கிழமை (பிப். 9) தொடங்கவுள்ளது. 4 டெஸ்ட், 3 ஒரு நாள் ஆட்டங்கள் அடங்கிய இந்தத் தொடர்களில், டெஸ்ட் எப்போதுமே முக்கியமான ஒன்று. இங்கிலாந்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் கடுமையான போட்டி என்றால் அது ஆஷஸ் தொடர்தான். அதேபோல் ஆஸி.க்கு இந்தியாவின் பார்டர் கவாஸ்கர் கோப்பை முக்கியமானது. ஏனெனில் இந்தியா ஆஸி.வை இந்தத் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
பிப். 9ஆம் தேதி நடைபெறும் இந்தப் போட்டிக்கு சமூக வலைதளங்களில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்டர் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்டில் 15,901 ரன்களை கடந்துள்ளார். 30 சதங்களும் 4 இரட்டை சதங்களும் அடித்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் இது குறித்து கூறியதாவது: இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்வது என்பது மலையை சாய்ப்பது போல கடினமானது. ஸ்பின் அதிகமாக இருக்கும் இந்திய மண்ணில் இந்தியாவை டெஸ்டில் வீழ்த்துவது என்பது ஆஷஸ் தொடரை வெல்வதை விடப் பெரியது.
________________
ஓய்வை அறிவித்த ஆஸி. கேப்டன் ஆரோன் பிஞ்ச்
2018-ல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான ஃபிஞ்ச், அந்த வருடத்துக்குப் பிறகு எந்தவொரு டெஸ்டிலும் விளையாடவில்லை. எனினும் ஆஸ்திரேலிய ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக உள்ளார். ஃபிஞ்ச் தலைமையில் ஆஸ்திரேலிய அணி, கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்றது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். டி20யில் 3120 ரன்களை எடுத்துள்ளார்.
142.5 ஸ்டிரைக்ரேட்டுடன் விளையாடக் கூடியவர். தற்போது டி20 தொடரில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். ஃபிஞ்ச் கூறியதாவது: என்னால் அடுத்த (2024) டி20 உலகக் கோப்பை வரை விளையாட முடியாது எனத் தெரியும். இதுதான் ஓய்வை அறிவிக்க சரியான நேரம். கேப்டனாக இருக்கும்போது 2012ஆம் ஆண்டு முதன்முறையாக டி20 உலகக் கோப்பை வெல்லும்போதும், 2015இல் சொந்த மண்ணில் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதும் என் வாழ்நாளில் எப்போதும் மறக்க முடியாத இரண்டு நிகழ்ச்சிகள் என்பேன்.
________________
தேசிய டேபிள் டென்னிஸ்: சென்னையில் நேற்று துவக்கம்
யுடிடி 84-வது மாநிலங்களுக்கு இடையிலான யு-17, யு-19 தேசிய டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று (8-ம் தேதி) தொடங்குகிறது. அணிகள் பிரிவு, தனிநபர், இரட்டையர் பிரிவில் போட்டிகள் நடைபெற உள்ளன. தமிழகத்தில் இருந்து அணிகள் பிரிவில் 16 பேரும், சிறுவர் பிரிவில் 15 பேர், சிறுமியர் பிரிவில் 15 பேர் கலந்துகொள்கின்றனர். இந்தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.6.6 லட்சம் ஆகும். இரு பாலருக்கான யு-19 பிரிவில் சாம்பியன் பட்டம்வெல்பவருக்கு தலா ரூ.72 ஆயிரம்மற்றும் பதக்கம் பரிசாக வழங்கப்படும். 2-வது இடம் பிடிப்பவருக்கு ரூ.36 ஆயிரமும், அரை இறுதியில் தோல்வி அடைபவர்களுக்கு ரூ.19 ஆயிரமும், கால் இறுதி சுற்றுடன் வெளியேறுபவர்களுக்கு ரூ.8 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.
அதேவேளையில் இரு பாலருக்கான யு-17 பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு தலா ரூ.60 ஆயிரம் வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. நேற்று மாலை 5 மணி அளவில் தொடக்க விழா நடைபெறுகிறது. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். இத்தகவலை தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்க தலைவர் டி.தேவநாதன், செயலாளார் ஏ.வி.வித்யாசாகர், துணை தலைவர் முரளிதர ராவ், போட்டி ஒருங்கிணைப்பாளர் கணேசன் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.
________________
விராட் கோலி போட்ட டுவிட்
கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீபத்தில் தனது புதிய தொலைபேசியை தொலைத்துவிட்டதாக ட்விட்டரில் பகிர்ந்தார். பாக்ஸை திறந்துகூட பார்க்காத நிலையில் தனது போன் தொலைத்துவிட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்த ஜொமெட்டோ உங்கள் புதிய தொலைபேசி காணாமல் போன சோகம் மறக்க ஐஸ் கீரிம் ஆர்டர் செய்து பாருங்கள் என பதிவிட்டது. இந்த டுவிட் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது. இந்த டுவிட் பல எதிர்வினைகளைத் தூண்டியது. சிலர் அக்கறை காட்டினாலும், மற்றவர்கள் இது ஒரு விளம்பர வித்தையாக இருக்கலாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
________________
பாகிஸ்தான் சொல்வதை செய்யாது: ரவிச்சந்திரன் அஸ்வின் கணிப்பு
6 அணிகள் பங்கேற்கும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இரு நாட்டு உறவு சீராக இல்லாததால் இந்திய அணியால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட முடியாது. அதற்கு பதிலாக இந்த போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷா அறிவித்தார்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு நாம் செல்லாவிட்டால் அவர்கள் இந்தியாவுக்கு வரமாட்டோம் என்கிறார்கள். ஆனால் இப்படி நடப்பதை நாம் பலமுறை பார்த்திருப்போம். ஆசிய கோப்பை தொடரை அங்கு நடத்தக்கூடாது என நாம் சொல்லும் போது அவர்களும் நமது இடத்துக்கு வரமாட்டோம் என்று சொல்வார்கள். ஆனால் அது சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன். ஆசிய கோப்பை இலங்கைக்கு மாற்றப்படலாம். இது 50 ஓவர் உலகக்கோப்பைக்கு ஒரு முன்னிலையாக இருக்கலாம். துபாயில் பல தொடர்கள் நடைபெற்றுள்ளன. ஆசிய கோப்பை தொடர் இலங்கைக்கு மாற்றப்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன். இவ்வாறு அவர் கூறினார்.
________________
தந்தையின் சாதனையை சமன் செய்த சந்தர்பால்
ஜிம்பாப்வே- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது. முதல் இரு நாட்களில் மழை பாதிப்புக்கு இடையே பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் இழப்பின்றி 221 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் 116 ரன்களுடனும், தேஜ்நரின் சந்தர்பால் 101 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த பிராத்வெய்ட்-தேஜ்நரின், தொடக்க விக்கெட்டுக்கு 300 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வெஸ்ட் இண்டீஸ் ஜோடி என்ற சிறப்பை பெற்றனர். இந்த கூட்டணி ஸ்கோர் 336-ஐ எட்டிய போது உடைந்தது. பிராத்வெய்ட் 182 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். மறுமுனையில் அபாரமாக ஆடிய தேஜ்நரின் சிக்சர் அடித்து தனது முதலாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார்.
முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றிய 10-வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 143 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 447 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. தேஜ்நரின் 207 ரன்களுடன் (467 பந்து, 16 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். இவரது தந்தை ஷிவ் நரின் சந்தர்பால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 203 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த ஸ்கோரை தனது 3-வது டெஸ்டிலேயே கடந்து அசத்தியிருக்கிறார். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. நேற்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வங்கக்கடலில் உருவாகிறது மேலும் ஒரு புயல் சின்னம் : 8 மாவட்டங்களில் இன்று கனமழை
17 Nov 2025சென்னை, தென்கிழக்கு வங்கக் கடலில் வருகிற 22-ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
திருவண்ணாமலை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: வரும் 24-ம் தேதி கொடியேற்றம்
17 Nov 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-11-2025.
17 Nov 2025 -
காந்தா திரைவிமர்சனம்
17 Nov 20251950களின் காலக்கட்டத்தில் சேலம் மாடன் ஸ்டுடியோவில் பிரபல நடிகர் ஒருவருக்கும், அவரை உருவாக்கிய இயக்குநர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சனையை மையமாக்க் கொண்டு உருவ
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆண்பாவம் பொல்லாதது படக்குழு
17 Nov 2025டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியான படம் ஆண்பாவம் பொல்லாதது.
-
சிசு படத்தின் 2-ஆம் பாகம் ரோட் டு ரிவெஞ்ச்
17 Nov 2025ஜல்மாரி லாண்டர் இயக்கத்தில் இம்மாதம் 21 ந்தேதியன்று வெளியாக உள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘ரோட் டு ரிவெஞ்ச்’.
-
மெட்ராஸ் மாஃபியா கம்பெனி திரைவிமர்சனம்
17 Nov 2025பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தாதா ஆனந்தராஜ், தன் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படாமல் கவனமாக பார்த்துக் கொள்கிறார்.
-
ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர்
17 Nov 2025சென்னை : ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து ஆய்வு மேற்கொள்ள தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்களிடமிருந்து 28.11.2025 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக உயர்கல்வித்துறை அ
-
திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு
17 Nov 2025திருப்பதி : திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் வெளியீடு செய்யப்படுகிறது.
-
கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி வழக்கு
17 Nov 2025சென்னை : பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
-
உண்மை சம்பவத்தை சொல்லும் தீயவர் குலை நடுங்க
17 Nov 2025அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’.
-
சவுதியில் பேருந்து விபத்தில் 45 இந்தியர்கள் பலியான சம்பவம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
17 Nov 2025துபாய் : மதீனா அருகே நடந்த துயரமான பேருந்து விபத்தில் 45 இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றம்
17 Nov 2025செம்பரம்பாக்கம், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து1,200 கனஅடியாக நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
இயற்கை விவசாயிகள் மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை வருகை
17 Nov 2025கோவை : கோவை கொடிசியா வளாகத்தில் நாளை நடைபெறவுள்ள இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கோவை வருகிறார்.
-
வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது : உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
17 Nov 2025சென்னை : வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
-
கும்கி 2 திரைவிமர்சனம்
17 Nov 2025நாயகன் மதி, மலை காட்டில் குழியில் சிக்கிக் கொண்ட குட்டி யானை ஒன்றை காப்பாற்றி வளர்க்கிறார். அந்த யானை ஒருநாள் திடீரென்று மாயமாகி விடுகிறது.
-
42 இந்தியர்கள் உயிரிழப்பு : பிரதமர் மோடி இரங்கல்
17 Nov 2025புதுடெல்லி : சவுதி அரேபியாவில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 45 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
வரும் 2028-ல் சந்திரயான்-4 ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
17 Nov 2025கொல்கத்தா : 2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் தெரிவித்தார்.
-
பீகார் புதிய அமைச்சரவையில் பா.ஜ.க.வுக்கு கூடுதலாக இடம்
17 Nov 2025பாட்னா : பீகார் முதல்வராக நிதிஷ்குமார் நாளை மறுநாள் பதவியேற்கவுள்ள நிலையில் அமைச்சரவைியல் பா.ஜ.க.வுக்கு கூடுதல் இடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள
-
பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதீஷ்
17 Nov 2025பாட்னா, பீகார் முதல்வர் பதவியை நிதீஷ் குமார் ராஜினாமா செய்துள்ளார். கவர்னர் முகமது கானிடம் தனத் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
-
முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
17 Nov 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி.
-
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவ தகவல் மையங்கள்: அமைச்சர்
17 Nov 2025சென்னை, சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேரமும் தகவல் மையங்கள் செயல்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
சபரிமலையில் தங்கம் திருட்டு வழக்கு: 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு
17 Nov 2025கேரளா, துவார பாலகர் சிலையில் தங்கம் திருட்டு தொடர்பாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு செய்து வருகிறது.
-
கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 2.50 கோடி பேர் பயன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Nov 2025சென்னை, ‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 2.50 கோடி பேர் பயனடைந்துள்ளனா் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு; அமீர் அலிக்கு 10 நாள் என்.ஐ.ஏ. காவல்
17 Nov 2025புதுடெல்லி, டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் அலி ஆஜர்படுத்தப்பட்டார்.


