முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனில் 30 குடியிருப்பு கட்டிடங்கள் சேதம்

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2023      உலகம்
Ukraine 2023 03 17

ரஷ்யாவின் தாக்குதலில் 30 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில், இருதரப்பிலும் ஏராளமான உயிர் சேதங்கள் ஏற்பட்ட்டுள்ளன. 

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றன. 

இதனிடையே உக்ரைனின் உள்கட்டமைப்பை தகர்க்கும் நோக்கில் ரஷ்யா தொடர்ந்து தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் உக்ரைனில் உள்ள கோஸ்டியான்டினிவ்கா என்ற நகரத்தில் ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. 

இந்த தாக்குதலில் அந்நகரத்தில் உள்ள 30 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதில் 50 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும், 7 பேர் படுகாயமடைந்ததாகவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குடியிருப்பு கட்டிடங்கள் மட்டுமின்றி ரயில் நிலையங்கள், மார்கெட் மற்றும் தனியார் விடுதிகள் மீதும் ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து