முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாக்லேட் தொழிற்சாலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

சனிக்கிழமை, 25 மார்ச் 2023      உலகம்
United-States 2023 03 25

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் மேற்கு ரீடிங் பாரோ பகுதியில் சாக்லேட் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் மேற்கு ரீடிங் பாரோ பகுதியில் சாக்லேட் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் சாக்லேட் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர்.

இந்த வெடிவிபத்து குறித்து தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் மாயமாகினர். 

மாயமான 9 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெடிவிபத்தால் சாக்லேட் தொழிற்சாலை நிலைகுலைந்ததால் மாயமானோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால், மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து