முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில மொழிகளில் ஐகோர்ட் தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பேச்சு

சனிக்கிழமை, 25 மார்ச் 2023      தமிழகம்
CM-2 2023 03 25

Source: provided

சென்னை :  ஐகோர்ட் தீர்ப்புகள் அனைத்தும் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட  வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.  

மதுரையில் ரூ.166 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டிடங்களுக்கு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் அடிக்கல் நாட்டினார்; இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, ஐகோர்ட் பொறுப்பு  தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் ஐகோர்ட் நீதிபதிகள் பலர் பங்கேற்றனர்.  

மேலும், சட்டத்துறை அமைச்சர்  ரகுபதி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் , பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் பார் கவுன்சில் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது: ‘

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு. தமிழ் நாட்டிலுள்ள நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு மிக சிறப்பாக உள்ளது. இந்தியாவில் பல்வேறு நீதிமன்றத்தில் காற்றோட்டம் இல்லாமலும், கழிப்பறை இல்லாமலும் உள்ளது. காணொலி நீதிமன்றம் மூலம் மதுரையிலுள்ள சட்ட கல்லூரி மாணவர்கள் சுப்ரீம் கோர்ட் வழக்குகளை கவனிக்க முடிகிறது. 

தமிழக முதல்வர் தரப்பில் 3 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் ஒட்டுமொத்த நாட்டிற்குமானது. இணையவழி மூலமாக நீதிபதி டெல்லியில் இருக்கும் வழக்கறிஞர்கள் மேலூரிலோ, விருதுநகரிலோ இருந்து வாதிடலாம். நீதிமன்ற செயல்பாடுகளை நேரலை செய்வதன் மூலமாக சட்டக் கல்லூரி மாணவர்களும் கற்றுக் கொள்ள வாய்ப்பாக அமையும். 

ஐகோர்ட் தீர்ப்புகள் அனைத்தும் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும். சென்னை ஐகோர்ட் தீர்ப்புகளை தமிழில் வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து