முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம்: 64 சதவீத கால்வாய் வெட்டும் பணி நிறைவு: அமைச்சர் தகவல்

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2023      தமிழகம்
Duraimurugan 2022 12 11

Source: provided

சென்னை : காவிரி - குண்டாறு இணைப்பு நடந்தே தீரும் என்றும் 64 சதவீத கால்வாய் வெட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். 

காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசினர். அப்போது அவர் கூறியதாவது:- 

காவிரி- குண்டாறு திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்ததைப் போல் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். அவர் மட்டுமே இந்தத் திட்டத்தை செய்யவில்லை. காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் குறித்து சிந்தித்தவர் கருணாநிதி தான். அதற்காக முதன்முதலில் கதவணை கட்ட நிதி ஒதுக்கியவர் கருணாநிதி. 

அந்த கதவணையைக் கட்டியது நான் தான். 2008-ம் ஆண்டு கருணாநிதி இதற்கான ஆணையைப் பிறப்பித்தார். 2009-ம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் கால்வாய் வெட்டும் பணி நடைபெறவில்லை. தி.மு.க. ஆட்சியில் கால்வாய் வெட்டும் பணிக்கு ரூ.177 கோடி  செலவு செய்யப்பட்டுள்ளது. 64 சதவீத கால்வாய் வெட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது. தி.மு.க. ஆட்சியில் காவிரி - குண்டாறு இணைப்பு நடந்தே தீரும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து