எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.26 - தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வி கட்டணத்தை இன்னும் கணிசமாக உயர்த்த வேண்டும் என்று nullநீதிபதி ரவிராஜபாண்டியன் குழுவிடம் மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழகத்தில் தனியார் நடத்தும் மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொது மக்கள் புகார் கூறியதை தொடர்ந்து தமிழக அரசு nullநீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க குழு அமைத்திருந்தது. இக்குழுவினர் ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆய்வு நடத்தி கட்டணங்களை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால் இந்த கல்விக்கட்டணம் மிகவும் குறைவாக இருப்பதாகக்கூறி தனியார் பள்ளிகள் அதை ஏற்க மறுத்தன. இதையடுத்து சுமார் 6,400 பள்ளி நிர்வாகிகள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையொட்டி ஐகோர்ட்டு மீண்டும் பள்ளிகளை ஆய்வு செய்து கட்டணத்தை சரி செய்யுமாறு உத்தரவிட்டது. இந்நிலையில் nullநீதிபதி கோவிந்தராஜன் இந்த குழுவிலிருந்து திடீரென விலகினார். உடல் நலம் காரணமமாகவும், சொந்த பிரச்சனையின் காரணமாகவும் அவர் இக்குழுவிலிருந்து விலகுவதாக கூறினார்.
இதனைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற nullநீதிபதி ரவிராஜ் பாண்டியன் கல்வி கட்டண நிர்ணய குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான குழுவினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் குறித்து கருத்து கேட்டனர். ஏற்கனவே மற்ற மாவட்ட பள்ளிகளில் கருத்து கேட்பு முடிந்து விட்டது. பல மாதங்களாக நடைபெற்று வரும் கருத்து கேட்பு கூட்டம், இப்போது சென்னையில் உள்ள பள்ளி நிர்வாகிகளிடம் கல்வி கட்டணம் சரிதானா? அல்லது கூடுதலாக கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கலாமா? என்பதை பற்றி கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று காலை கல்லூரி சாலையில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் nullநீதிபதி ரவிராஜபாண்டியன் பள்ளி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டார். அவருடன் மெட்ரிகுலேசன் இயக்குனர் தேவராஜூம் உடன் இருந்தார். ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளிடமும் சுமார் 5 நிமிட நேரம் விசாரிக்கப்பட்டது. ஏற்கனவே எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது அரசு நிர்ணயித்த கட்டணம் எவ்வளவு? நீnullங்கள் எவ்வளவு வசூலிக்கலாம் என்று எதிர்பார்க்கிறீர்கள்? என்ற கேள்விகளுக்கு எழுத்து nullர்வமாக ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளும் எழுதி கொடுத்தனர். பள்ளிக்கூடத்திற்கு கட்டப்படும் வரி, மின்சார செலவு, தொலைபேசி, கம்ப்யூட்டர் செலவு, பள்ளி வாடகை, பேப்பர் வாங்கும் செலவு, கட்டிட பராமரிப்பு செலவு, ஆசிரியர்களின் சம்பளம் போன்றவைக்கு எவ்வளவு செலவழிக்கப்படுகிறது என்பதை எழுத்துப்nullர்வமாக ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளிடமும் எழுதி வாங்கி கொண்டனர். சென்னையில் மொத்தம் 600 பள்ளிகளில் இருந்து இதுபோன்ற விவரங்கள் பெறப்படுகின்றன. இதற்காக nullநீதிபதி ரவிராஜபாண்டியன் வருகிற 27-ந் தேதி வரை(நாளை வரை) மனுக்கள் வாங்குகிறார். இதன் பிறகு வருகிற மே மாதம் 2-ந் தேதி ஆங்கிலோ இந்தியன் பள்ளி நிர்வாகிகளிடமும் மனுக்கள் பெற உள்ளார். அனேகமாக 10ந் தேதிக்குள் கல்வி கட்டண நிர்ணயம் குறித்து ஒரு தெளிவான விவரங்கள் தெரிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருத்து கேட்பு குழுவில் ஆஜராகி மனு கொடுத்துவிட்டு வந்த பள்ளி நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: சுப்பாராவ்: (துர்கா மெட்ரிகுலேசன் பள்ளி, கோடம்பாக்கம்) எங்கள் பள்ளிக்கு எல்.கே.ஜி.க்கு ரூ.3,500 நிர்ணயம் செய்திருப்பதை ரூ.7 ஆயிரமாக உயர்த்தி கேட்டுள்ளோம். பிளஸ்2க்கு ரூ.7 ஆயிரம் நிர்ணயித்ததை ரூ.15 ஆயிரம் கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதி கேட்டுள்ளோம். டி.டி. அரசு:(டி.டி.ஒ. மெட்ரிகுலேசன் பள்ளி, சூளைமேடு) எல்.கே.ஜி.க்கு ரூ.2050 அரசு நிர்ணயித்துள்ளது. இதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி கேட்டுள்ளோம். பிளஸ்2 க்கு ரூ.16 ஆயிரம் வசூலிக்க அனுமதி கோரி உள்ளோம்.
புருஷோத்தமன்: (எவர்வின் மெட்ரிக் பள்ளி, கொளத்தூர்) எங்கள் பள்ளிக்கு எல்.கே.ஜி. வகுப்புக்கு ரூ.5 ஆயிரம் நிர்ணயித்திருந்தனர். இதை ரூ.13 ஆயிரமாக உயர்த்தி தர கேட்டுள்ளோம். பிளஸ்2 வகுப்புக்கு ரூ.11 ஆயிரம் நிர்ணயித்துள்ளதை ரூ.28 ஆயிரத்திற்கு உயர்த்தி தருமாறு கேட்டுள்ளோம்.
ஆக, வந்திருந்த நிர்வாகிகள் அனைவருமே அரசு நிர்ணயித்துள்ள தொகையைக்காட்டிலும் குறைந்தபட்சம் இரு மடங்காவது அதகரித்துத் தரவேண்டும் என்றே கோரிக்கை வைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா விஸ்வாவின் சா்ச்சை வீடியோ குறித்து இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
15 Feb 2026புதுடெல்லி, அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, முஸ்லிம் சமூகத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போன்ற சா்ச்சை காணொலிக் காட்சி தொடா்பாக தொடரப்பட்ட மனுக்களை சுப்ரீம்
-
உ.பி.: தலித் இளைஞர் கொலை வழக்கில் 3 குற்றவாளிகள் கைது: என்கவுன்டரில் 2 பேருக்கு காயம்
15 Feb 2026லக்னோ, உத்தரப் பிரதேசத்தில் தலித் இளைஞர் கொலை வழக்கில் மூன்று குற்றவாளிகள் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்
-
பெங்களூரில் விபத்து - 5 இளைஞர்கள் பலி
15 Feb 2026பெங்களூரு, பெங்களூரில் வேகமாக வந்த கார், பேருந்து மீது மோதியதில் இளைஞர்கள் 5 பேர் பலியாகினர்
-
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்புகிறார்: ராகுல் மீது அமித் ஷா குற்றச்சாட்டு
15 Feb 2026புதுடெல்லி, வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி பொய் பரப்புகிறார்.
-
அறியாமையின் உச்சத்தில் இருக்கிறார்: விஜய் மீது அமைச்சா் விமர்சனம்
15 Feb 2026கோவை, த.வெ.க. தலைவைர் விஜய் அறியாமையின் உச்சத்தில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
2024-25 நிதியாண்டில் மட்டும் தோ்தல் அறக்கட்டளைகள் திட்டத்தில் கட்சிகளுக்கு ரூ.3,826 கோடி நன்கொடை: அதிகபட்சமாக பா.ஜ.க.வுக்கு 82 சதவீதமாம்
15 Feb 2026புதுடெல்லி, தோ்தல் அறக்கட்டளைகள் (எலக்டோரல் டிரஸ்ட்) திட்டத்தில் 2024-25 நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு ரூ.3,826.35 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக ஜனநாயக சீா்திருத
-
பாரதம் செழிப்பின் உச்சம் அடையட்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து
15 Feb 2026புதுடெல்லி, சிவபெருமானின் ஆசியால் நமது பாரதம் செழிப்பின் உச்சத்தில் அரியணையிட்டு நிலைத்திருக்கட்டும் என்று மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து
-
மறுதணிக்கை செய்வதில் தாமதம்: ஜூன் மாதம் ஜனநாயகன் வெளியீடு?
15 Feb 2026சென்னை, மறுதணிக்கைக்காக ஜன நாயகன் அனுப்பப்பட்ட நிலையில் திரைப்படத்தை தணிக்கை வாரியம் இன்னமும் மறுதணிக்கைக்காக திரைப்படத்தைப் பார்க்காததால் படம் ஜூன் மாதம் அதாவது தேர்தல
-
இந்தியாவில் அமையும் முதல் நீருக்கடியில் செல்லும் சாலை - ரயில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
15 Feb 2026புதுடெல்லி, இந்தியாவின் முதல் நீருக்கடியில் அமையவுள்ள சாலை-ரெயில் சுரங்கப்பாதை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு மனித நேய மக்கள் கட்சி தீர்மானம்
15 Feb 2026சென்னை, 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக மனித நேய மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
வருகிற 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் புதிய கட்சியை தொடங்குகிறார் சசிகலா
15 Feb 2026மதுரை, வருகிற 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் புதிய கட்சியை சசிகலா தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சபரிமலையில் பெண்கள் அனுமதி விவகாரம்: மறுஆய்வு மனுக்களை இன்று பரிசீலிக்கிறது சுப்ரீம் கோர்ட்
15 Feb 2026திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி தாக்கல் செ
-
12 நாட்களுக்கு ஒருமுறை நிசாா் செயற்கைக்கோள் மூலம் மண் ஈரப்பத தரவுகள் வெளியீடு: இஸ்ரோ
15 Feb 2026பெங்களூரு, இந்திய நிலப்பரப்பில் மண்ணின் ஈரப்பதத்தை ஆய்வு செய்து 12 நாட்களுக்கு ஒருமுறை நிசாா் செயற்கைக்கோள் தரவுகளை வெளியிடவுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (
-
விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்: 4 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சாமி தரிசனம்
15 Feb 2026தூத்துக்குடி, விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
-
மாசி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலையில் குவிந்த பக்தர்கள்
15 Feb 2026சபரிமலை, சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் மட்டுமின்றி மாதாந்திர பூஜைகளுக்காக நடை திறக்கப்படும் காலத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காண


