முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரர் ஆனார் நீரஜ் சோப்ரா

செவ்வாய்க்கிழமை, 23 மே 2023      விளையாட்டு
Neeraj-Chopra 2023 05 23

சென்னை. ஈட்டி எறிதலில் ஆடவர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரர் ஆகியுள்ளார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா. 25 வயதான அவர் அண்மைய தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர். அதன் மூலம் ஆடவர் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற முதல் ஆசிய வீரர் என அறியப்படுகிறார்.

இதன் மூலம் உலக சாம்பியனான கிரெனடா நாட்டு வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸை, நீரஜ் முந்தியுள்ளார். மொத்தம் 1,455 புள்ளிகளை அவர் பெற்றுள்ளார்.ஆண்டர்சன் பீட்டர்ஸ், 1,433 புள்ளிகளை பெற்றுள்ளார்.

உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி மற்றும் டைமண்ட் லீகில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் நீரஜ். வரும் ஜூன் மாதம் நெதர்லாந்து மற்றும் பின்லாந்தில் நடைபெற உள்ள போட்டிகளில் நீரஜ் பங்கேற்க உள்ளார்.

ஆடவர் ஈட்டி எறிதலில் முதல் 5 இடங்களில் உள்ள வீரர்கள்

  1. நீரஜ் சோப்ரா (இந்தியா) - 1455 புள்ளிகள்
  2. ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரெனடா) - 1433 புள்ளிகள்
  3. ஜக்குப் வட்லெஜ் (செக் குடியரசு) - 1416 புள்ளிகள்
  4. ஜூலியன் வெபர் (ஜெர்மனி) - 1385 புள்ளிகள்
  5. அர்ஷத் நதீம் (பாகிஸ்தான்) - 1306 புள்ளிகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து