முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய சட்டத்திருத்தம் தெடர்பாக உத்தவ் தாக்கரேவுடன் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சந்திப்பு

புதன்கிழமை, 24 மே 2023      இந்தியா
Kejriwal 2023-05-24

மும்பை, மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம் தெடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் மகாராஷ்டிரத்தின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்துப் பேசினர். 

மும்பையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், உத்தவ் தாக்கரேவுடன், சஞ்சய் ரெளத்தும் கலந்துகொண்டனர். இதில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஒன்றிணைவது குறித்தும் மாநில அரசின் உரிமைகளை காப்பது குறித்தும் பேசப்பட்டது.  இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை உத்தவ் தாக்கரே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டாக சந்தித்தனர்.

அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், டெல்லி அரசின் நிர்வாக அதிகாரங்கள் தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் இருக்க எங்களுக்கு ஆதரவு அளிப்பதாக உத்தவ் தாக்கரே வாக்குறுதி அளித்துள்ளார். வருகின்ற 2024 தேர்தலில் மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வராது எனத் தெரிவித்தார். முன்னதாக, கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து