முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற திறப்பு விழா புறக்கணிப்பு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எதிர்க்கட்சிகளுக்கு நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்

வியாழக்கிழமை, 25 மே 2023      தமிழகம்
Nirmala-Seetharaman 2023-04-06

Source: provided

சென்னை:  புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பது என்ற முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்க இருக்கிறார். இந்த விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 

ஜனாதிபதியைுயம், துணை ஜனாதிபதியையும் மத்திய அரசு புறக்கணித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், பாராளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய பாராளுமன்றம் திறப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்து கூறியதாவது,

புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வில்லை என்ற நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் எடுத்துள்ளன. புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. அடுத்த 200 ஆண்டுகள் இருக்கக் கூடிய நாட்டின் பெருமையான சின்னம்.  தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் அங்கு அமர்ந்து தான் மக்களின் பிரச்சனைகளை பேசப் போகிறோம். எனவே இந்த சபையை புறக்கணிக்க வேண்டுமா?. 

இது ஜனநாயகத்தின் கோவில். பிரதமர் முதல் முறையாக பாராளுமன்றத்தில் நுழைந்த போது சிரம் தாழ்த்தி அந்த கோவிலை வணங்கி விட்டு தான் உள்ளே சென்றார். எந்த காரணமாக இருந்தாலும் நிகழ்வில் கலந்து கொள்வது நாம் அந்த கோவிலுக்கு நாம் கொடுக்க வேண்டிய மரியாதை.

ஜனநாயகத்தில் மக்களின் பிரச்சனைகள் குறித்து பேசக் கூடிய அந்த கோவிலில் அமர்ந்து தான் நாம் மக்களுக்கு தேவையான விஷயங்களை கொண்டு வருகிறோம். அதை புறக்கணிப்பது நல்லது இல்லை. 

நான் எதிர்கட்சிகளிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். அவர்களின் நிலைப்பாடை மறு பரிசீலனை செய்ய வேண்டும். மக்களுக்காகவாது அந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து