Idhayam Matrimony

ம.தி.மு.க. அவை தலைவர் திருப்பூர் துரைசாமி கட்சியில் இருந்து விலகல்

செவ்வாய்க்கிழமை, 30 மே 2023      தமிழகம்
Duraisamy 2023-05-30

Source: provided

திருப்பூர் : ம.தி.மு.க.வின் வாழ்நாள் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அக்கட்சியின் மாநில அவைத் தலைவர் துரைசாமி தெரிவித்துள்ளார். 

இது குறித்து திருப்பூரில் ம.தி.மு.க. மாநில அவைத் தலைவர் துரைசாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ம.தி.மு.க. தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து தங்களது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பதவிக்கு வர மாட்டார்கள் என்று பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்து வந்தார். இதனை தலைமைக் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் முழுமையாக நம்பி வந்தனர். 

ஆனால் தங்களது மகனான துரை வைகோவை அரியாசனத்தில் அமர்த்த விரும்பும் நடவடிக்கையில் என்னைப் போன்றவர்களுக்கு உடன்பாடு இல்லை. பேரறிஞர் அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று வாழ்ந்து அரசியல் செய்து வந்த என்னால் இனியும் வைகோவுடன் பயணிக்க இயலாது. 

அவர் மீது நம்பிக்கை வைத்து அன்று உயிர்நீத்த உண்மைத் தொண்டர்களுக்காக கட்சியை தி.மு.க.வுடன் இணைத்து விடுவது நல்லது. எனெனில் ம.தி.மு.க.வுக்கு என்று தனியாக எதிர்காலம் இல்லை. ஆகவே, ம.தி.மு.க.வின் வாழ்நாள் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் என்னை விடுவித்துக் கொள்கிறேன்.

அதே வேளையில், எந்த ஒரு அரசியல் கட்சியில் சேரும் எண்ணமும் இல்லை என்று தெரிவித்தார். ஆனால் கோவை பெரியார் மாவட்ட பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளராக தொடர்ந்து நீடிப்பதாக அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து