Idhayam Matrimony

ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து: சிறப்பு ரயில்கள் மூலம் இன்று 383 பேர் சென்னை வருகை

சனிக்கிழமை, 3 ஜூன் 2023      தமிழகம்
Train 2023-04-06

Source: provided

சென்னை : ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தை தொடர்ந்து சிறப்பு ரயில்கள் மூலம் 383 பேர் இன்று சென்னை வந்தடைகின்றனர். 

ஒடிசாவில் பாலசோர் பகுதியில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் தவிப்புக்குள்ளானார்கள். விபத்துக்குள்ளான 2 பயணிகள் ரயிலில் சுமார் 2 ஆயிரம் பயணிகள் பயணித்தது தெரிய வந்துள்ளது. அவர்களில் பாதி பேர் காயம் அடைந்து உள்ளனர். சுமார் 1000 பயணிகள் அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு தவிக்க நேரிட்டது. பலர் உடனடியாக பஸ்களை பிடித்து மற்ற பகுதிகளுக்கு புறப்பட்டு சென்றனர். 

தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து எப்படி செல்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான பயணிகள் விபத்து நடந்த பகுதிக்கு அருகிலேயே அமர்ந்திருந்தனர். அவர்களை குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை ரயில்வே அதிகாரிகள் நேற்று காலை செய்தனர். 

இதற்காக விபத்து பகுதிக்கு அருகே வரை சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மேற்கு வங்கத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. சென்னை சென்ட்ரலில் இருந்தும் சிறப்பு ரயில் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த ரயில் பத்ரக் நகரம் வரை சென்று அங்கிருந்து பயணிகளை ஏற்றி சென்னை திரும்பும் என்று தெரிய வந்துள்ளது. அந்த ரயிலில் 250 பயணிகள் அழைத்து வரப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதே போல புவனேஸ்வரத்தில் இருந்தும் மற்றொரு சிறப்பு ரயில் சென்னைக்கு இயக்கப்படுகிறது. அந்த ரயிலில் 133 பேர் அழைத்து வரப்படுகிறார்கள். மொத்தம் 383 பேர் ஒடிசாவில் இருந்து சென்னை திரும்புகிறார்கள்.  இவர்களை அழைத்து வரும் சிறப்பு ரயில்கள் இன்று காலை சென்னை ரயில் நிலையம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து